பிரபல இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்! – அவரின் கிரிக்கெட் பயணம் குறித்த விரிவான தகவல்!

0

பிரபல இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சலீம் துரானி (வயது 88) உடல் நலக்குறைவுக் காரணமாக காலமானார்.

அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ரவி சாஸ்திரி, வி.வி.எஸ்.லட்சமணன், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள், பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான சலீம் துரானி யார்? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

கடந்த 1934 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11- ஆம் தேதி அன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிறந்தவர் சலீம் துரானி. சிறு வயதில் இருந்து கிரிக்கெட் மீது கொண்ட காதல் காரணமாக, தனது 25 வயதில் 1960- ஆம் ஆண்டு ஜனவரி 1- ஆம் தேதி அன்று ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது.

இதையடுத்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடதுகை பேட்ஸ்மேனாக களமிறங்கினார். அதைத் தொடர்ந்து, 50 டெஸ்ட் போட்டியில் 50 இன்னிங்சில் இந்திய கிரிக்கெட் அணி சார்பில் விளையாடிய சலீம் துரானி, 15 சிக்ஸர்கள், 126 பவுண்டரிகள், 7 அரைச்சதங்கள் , ஒரு சதத்துடன் 1,202 ரன்களை எடுத்துள்ளார்.

அதேபோல், டெஸ்ட் போட்டியில் 46 இன்னிங்சில் விளையாடி 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ‘

குஜராத் மாநிலம், ஜாம்நகரில் வசித்து வரும் தனது இளைய சகோதரருடன் சலீம் துரானி வசித்து வந்த நிலையில், இன்று காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here