ஐயோ ; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இருந்து வெளியேறிய இந்திய வீரர் ; என்ன செய்ய போகிறார் ரோஹித் ?

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயா நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் சமீபத்தில் தான் நடந்து முடிந்துள்ளது. அதில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி தொடரை வென்றுள்ளனர்.

இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறிய விதம் :

ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிகளில் மூன்று போட்டிகளில் வென்றிருந்தால் நேரடியாக உலகி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறியிருக்கும்.

ஆனால் முதல் இரு போட்டிகளில் வென்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் தோல்வியையும், நான்காவது போட்டி ட்ராவில் முடிந்தது. அதனால் இறுதி போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது.

இருப்பினும் நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிக்கான தொடரில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தால் இந்திய கிரிக்கெட் அணியால் இறுதி போட்டிக்கு சென்றிருக்க முடியாது.

ஆனால், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடித்தால் வெற்றியை கைப்பற்றினர். அதனால் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

இந்திய அணியில் இருக்கும் வீக்னஸ் :

தொடக்க வீரர்கள் அவ்வப்போது ரன்களை அடித்து வருவதால் சுலபமாக வெற்றியை கைப்பற்றி வருகின்றனர். ஆனால் 4வது இடத்தில் யாரை விளையாட வைத்தாலும் இந்திய அணிக்கு பெரிய பலன் எதுவும் கிடையாது.

இதற்கிடையில், ஸ்ரேயாஸ் ஐயர்-க்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் ஐபிஎல் 2023 முழுவதில் இருந்தும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இருந்து விலகியுள்ளார் ஸ்ரேயாஸ்.

ஒருநாள் போட்டிக்கான தொடர் ஸ்ரேயாஸ் இடத்தில் சூர்யகுமார் யாதவ் விளையாடி வருவதால் ரசிகர்கள் இடையே சர்ச்சை எழுந்துள்ளது. ஆமாம், சூர்யகுமார் யாதவ் முதல் இரு ஒருநாள் போட்டிக்கான தொடரிலும் மோசமான நிலையில் பேட்டிங் செய்து வந்தார். அதுமட்டுமின்றி ஒரு ரன்களை அடிக்கவில்லை.

இதற்கு பதிலளித்த வகையில் , ஸ்ரேயாஸ் ஐயர் எப்பொழுதும் இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்புவார் என்று தெரியாது. அதனால், அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளதாக கூறினார்.”

இப்பொழுது ஸ்ரேயாஸ் ஐயர் உறுதியாக விளையாட போவதில்லை என்ற தகவல் வெளியானதால், அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம்பெறுவது சிரமம் தான். பின்னர் எந்த வீரருக்கு வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே பதிவு செய்யுங்கள்..!