இவர் இல்லாம எப்படி இந்திய அணி விளையாட முடியும் ? ஆனால் இப்பொழுது வேறு வழியில்லை ; ஹர்டிக் பாண்டிய ஓபன் டாக் ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிராக மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற உள்ளது.

நாளை இரவு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஷனாக தலைமையிலான இலங்கை அணியும், ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் விளையாட உள்ளனர். அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் :

கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து அதிகாலையில் பயணம் செய்து கொண்டு இருந்த ரிஷாப் பண்ட் -ன் கார் விபத்தில் சிக்கியது. கார் தீப்பற்றி எறிந்த காரணத்தால் ரிஷாப் பண்ட் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இன்னும் 3 முதல் 6 மாதங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஹர்டிக் பாண்டிய பேட்டி :

டி-20 போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ஹர்டிக் பாண்டிய, நாளை நடைபெற உள்ள முதல் டி-20 போட்டிக்கான தொடரை பற்றி பேட்டி அளித்துள்ளார். அதில் “பிளான் இதுதான் என்று முடிவு செய்துவிட்டோம். ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பு 6 டி-20 போட்டிகள் மட்டுமே நடைபெற இருக்கிறது. அதனால் அதிகமாக விஷயங்களை செய்வதை விட முன்னேறிச்செல்வது தான் முக்கியமான ஒன்று. வரும் போட்டிகளில் அனைத்து வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க அனைத்து முயற்சிகளையும் கையில் எடுத்துள்ளோம்.”

“தேவைப்படும் போது சரியான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை பற்றி தான் யோசிப்போம். எது எப்படி இருந்தாலும் அணியில் இருக்கும் வீரர்கள் அவரவர் கதாபாத்திரங்களை சரியாக செய்ய வேண்டுமென்று தான் யோசிக்க வேண்டும். எனக்கு தெரிந்த உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு எதுவும் தவறாக போகவில்லை. ஏனென்றால், நாங்கள் செய்யும் அணுகுமுறை ஒரே விதம் தான். ஆனால், உலகக்கோப்பை போட்டியில் நாங்கள் நினைத்த படி நடக்கவில்லை என்பது தான் உண்மை. ஆனால் ஒன்று மட்டும் தான் வீரர்களுக்கு சொல்வேன்,வாய்ப்பு கொடுக்கும்போது அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்வேன்.” ஹர்டிக் பாண்டிய பேட்டி.

மேலும் ரிஷாப் பண்ட் பற்றி பேசிய ஹர்டிக் பாண்டிய கூறுகையில் : “ரிஷாப் பண்ட் அணியில் இல்லாதது நிச்சியமாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் அவர் (ரிஷாப் பண்ட்) அப்படிப்பட்ட வீரர். ஆனால் அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு பலருக்கு வாய்ப்பு கிடைக்கும். அவர் இப்பொழுது இல்லை, அதனால் எதிர்கால இந்திய அணியின் வீரர்கள் யார் என்பதை பார்க்கலாம் என்று கூறியுள்ளார் ஹர்டிக் பாண்டிய.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here