இந்தியா அணியை விமர்சம் செய்த சோயிப் அக்தருக்கு பதிலடி கொடுத்த ஷமி ; உனக்கு இது தேவையா …!

ஒருவழியாக ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது இங்கிலாந்து அணி.

போட்டியின் சுருக்கம் :

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு சிறந்த பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டையும் இழந்த நிலையில் 137 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதில் ரிஸ்வான் 15, பாபர் அசாம் 32, முகமத் ஹரிஸ் 8, மசூத் 38, ஷதாப் கான் 20, நவாஸ் 5, ஷாஹீன் அப்ரிடி 5 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. அதில் தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் மற்றும் ஹேல்ஸ் ஆகிய இருவரும் எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தாமல் விக்கெட்டை இழந்தனர்.

ஆனால் மிடில் ஆர்டரில் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவரது விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் தவித்த பாகிஸ்தான் அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது. 19 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 138 ரன்களை அடித்து பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது இங்கிலாந்து அணி.

அதில் ஜோஸ் பட்லர் 26, அலிஸ் ஹேல்ஸ் 1, பிலிப்ஸ் சால்ட் 10, பென் ஸ்டோக்ஸ் 52*, ஹரி ப்ரூக்ஸ் 20 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர்.

இந்திய அணிக்கு அறிவுரை சொன்ன பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் :

செமி பைனல் போட்டியில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை பெற்றுள்ளது இந்திய. அதனை விமர்சனம் செய்து அக்தர், இன்சமாம் போன்ற பல வீரர்கள் இந்திய அணியை விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியால் சரியாக பேட்டிங் செய்து ரன்களை முடியாமல் இருந்தனர்.

இந்த முறையும் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியால் வெல்ல முடியவில்லை. அதற்கு பாகிஸ்தான் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் இதயம் நொறுங்கியது போல பதிவு செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமத் ஷமி, அதனை பதிலடியாக மன்னிக்கவும் சகோதர இதுதான் கர்மா என்று கூறியுள்ளார். அதன் பதிவு இப்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.