இதற்கு மேல் இவர் அணியில் வேண்டாம் ; முன்னணி வீரரை வெளியேற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி ;

0

ஐபிஎல் : 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிக்கான தொடர். அதில் இருந்து இதுவரை மொத்தம் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் 16ஆம் சீசன் போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் கேரளாவில் நடைபெற உள்ளதாகவும் பிசிசிஐ கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு இரு புதிய அணிகளை (லக்னோ மற்றும் குஜராத்) அறிமுகம் செய்த காரணத்தால் மெகா ஏலம் நடைபெற்றது. ஆனால் இந்த முறை அதிகப்படியான வீரர்களை தக்கவைத்து கொள்ளாமல் என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் சிறப்பாக பங்களிக்கும் வீரரை தக்கவைத்து கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் பங்கேற்க போகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி :

ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பையை வென்ற பெருமை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தான் சேரும். ஏனென்றால், இதுவரை 15 சீசன் போட்டியில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இத்தகைய வெற்றியை கைப்பற்றுவதற்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் முக்கியமான காரணமாகி திகழ்கிறார்.

அடுத்த மாதம் ஏலம் நடைபெற உள்ளதால் தக்கவைக்க போகும் வீரர்களின் பட்டியலை வெளியிடுமாறு அனைத்து அணிகளுக்கும் பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விவரத்தை வெளியிட்டுள்ளனர். அதில் ரோஹித் சர்மா, ஜஸ்பிரிட் பும்ரா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், டேவால்டு ப்ரேவிஸ், திலக் வர்மா, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜோப்பிர ஆர்ச்சர், டேனியல் சாம்ஸ் போன்ற வீரர்களை தக்கவைத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

முக்கியமான வீரரை வெளியேற்றம் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்படும் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக வழிநடத்தி வந்துள்ளார் பொல்லார்ட். வெஸ்ட் இண்டீஸ் அணியை சசேர்ந்த அதிரடியாக விளையாடும் பொல்லார்ட், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் ஒரே அணியில் (மும்பை இந்தியன்ஸ்) விளையாடி கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிய நிலையில் ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் விளையாடி கொண்டு வருகிறார்.

ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் பொல்லார்ட் இல்லாதது, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 13 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் விளையாடி பல போட்டிகளில் வெல்ல காரணமாகவும் இருந்துள்ளார் பொல்லார்ட். ஒருவேளை வயது காரணமாக தான் வெளியேற்றிவிட்டார்களா ? 35 வயதை கடந்துள்ளார் பொல்லார்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here