இரு புதிய வீரர்களை களமிறங்கிய இந்திய அணியின் ப்ளேயிங் 11 இதுதான் ; முழு விவரம் இதோ ;

0

நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான தொடர் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த மூன்று டி-20 போட்டிக்கான தொடரில் 1 – 0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது இந்திய.

ஒருநாள் போட்டிக்கான தொடர் :

இன்று காலை 7மணியளவில் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதியுள்ளனர். இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தனர். அதனால் இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்து டார்கெட் வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இதுவரை, நடந்து முடிந்த 18 ஓவரில் 78 ரன்களை அடித்துள்ளது இந்திய. அதில் ஷிகர் தவான் 36 மற்றும் சுப்மன் கில் 40 ரன்களை அடித்துள்ளனர்.

இந்த ஒருநாள் போட்டிக்கான தொடரில் ரோஹித் சர்மா, ஹர்டிக் பாண்டிய, விராட்கோலி போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் விவரம் : ஷிகர் தவான், சுமன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் , சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்டுல் தாகூர், தீபக் சஹார், உம்ரன் மாலிக், அர்ஷதீப் சிங், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ் மற்றும் ரிஷாப் பண்ட் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியில் இரு புதிய வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. யார் அந்த வீரர்கள் ? டாஸ்-ல் தோல்வி பெற்ற பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் கூறுகையில் : “இதே இடத்தில் பல முறை விளையாடியுள்ளோம், அதனால் மீண்டும் விளையாடுவது சந்தோசமாக தான் இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்வதால் ஒரு பிரச்சனையும் கிடையாது, இருந்தாலும் நாங்க முதலில் பவுலிங் -ஐ தான் தேர்வு செய்ய முடிவு செய்தோம்.”

“விக்கெட் ஸ்டிக்கி ஆக இருக்கும் என்று நினைத்தோம், ஆனால் இப்பொழுது வெய்யில் இருப்பதால் விரைவாக பிட்ச் Dry ஆகிவிடும். இதே அணியுடன் நாங்க சில மாதங்களுக்கு முன்பு விளையாடினோம். அதுமட்டுமின்றி, அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது மிகவும் நல்லது. அப்பொழுது அவர்களாவது திறமை என்ன என்று தெரியவரும். மக்களின் ஆதரவு உலகின் அனைத்து பகுதியிலும் கிடைக்கும், அதில் சந்தேகம் வேண்டாம். இன்றைய போட்டியில் அர்ஷதீப் சிங், உம்ரன் மாலிக் ஆகிய இரு புதிய வீரர்கள் இருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அறிமுகம் செய்துள்ளோம் என்று கூறியுள்ளார் ஷிகர் தவான்.”

சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் ப்ளேயிங் 11 ல் இடம்பெற்ற அர்ஷதீப் சிங் சிறப்பாக பவுலிங் செய்துள்ளார். அதனால் பும்ரா-வை அடுத்து நிரந்திரமான ப்ளேயிங் 11ல் இடத்தை கைப்பற்றுவாரா ? அதே சமையத்தில் அதிவேகமாக பவுலிங் செய்யும் உம்ரன் மாலிக்-கிடம் ஸ்விங் இல்லாத காரணத்தால் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. வெறும் வேகத்தை வைத்து இந்திய அணியில் இடம்பெற முடியாது என்று கருத்துக்கள் எழுந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here