விராட்கோலி-க்கு பிறகு இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக இவரை நியமனம் செய்யுங்கள் ; முகமது ஷமி ஓபன் டாக் ;

0

கடந்த ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை 2021 போட்டியில் இருந்து ஆரம்பித்தது கேப்டன் சர்ச்சை. ஆமாம்..! விராட்கோலி அவராகவே நான் உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு டி-20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக அறிவித்தார். பின்னர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக விளையாடி வந்தார் விராட்.

ஆனால் அது அதிக நாட்கள் நீடிக்கவில்லை. பிசிசிஐ-யின் அதிரடி முடிவால் தென்னாபிரிக்கா அணிக்கு முன்பே ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலியை வெளியேற்றினார்கள். பின்னர் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான கேப்டனாக ரோஹித் சர்மா இடம்பெற்றார்.

பின்னர் வெறும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கேப்டனாக இருந்தார் விராட்கோலி. அனால் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 1- 2 என்ற கணக்கில் இந்திய அணி மோசமான நிலையில் இருந்தது. அதனால் இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

அந்த கோபத்தால் விராட்கோலி டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார். அது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பொழுது யார் அடுத்த டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் என்ற கேள்வி எழுந்துள்ளது..!

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி அளித்த பேட்டியில்; டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவி பற்றி கூறியுள்ளார். அதில் ” புதிய கேப்டன் முதல் முதலில் இந்திய அணியை இந்தியாவில் தான் வழிநடத்த போகிறார்.

ஆமாம்..! நிச்சயமாக இந்திய அணி புதிய கேப்டன் தேவைப்படுகிறது. அதுவும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் தான் நடைபெற உள்ளது. அதனால் அந்த கேப்டனுக்கு சாதகமாக அமைய அதிக வாய்ப்புகள் உள்ளன. என்னிடம் யார் என்று கேட்டால், நான் எப்பொழுது பவுலிங் பற்றியும், பவுலிங் செய்யும் வீரர்களை பற்றி மட்டும் தான் யோசித்து வருகிறேன்.

அதனால் யார் கேப்டனாக போகிறார் என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. இந்திய அணியில் ரோஹித் சர்மா, ரஹானே போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர். ஆனால் போட்டியின் முடிவு தான் முக்கியமான ஒன்று. அதனால் தனிப்பட்ட வகையில் ஒருவர் எப்படி விளையாடுகிறார்.

இந்திய அணியை பொறுப்புடன் முன்னோக்கி கொண்டு செல்கிறாரா என்பதை தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் முகமது ஷமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here