இவர் இல்லாமல் இந்திய அணியில் மிடில் ஆர்டர் வலுவிழந்து வருகிறது..! அவரை வர சொல்லுங்க : முன்னாள் கிரிக்கெட் வீரர் பேட்டி ;

இரு தினங்களுக்கு முன்பு தொடங்கியது இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள். இதுவரை இரு ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணி 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்து வருகிறது.

அதுமட்டுமின்றி ஒருநாள் போட்டிக்கான தொடரையும் கைப்பற்றியுள்ளது இந்திய அணி. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் போட்டி போல் இல்லாமல் பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை இழந்தது.

பின்னர் கே.எல்.ராகுல் மற்றும் சூரியகுமார் யாதவ் செய்த பார்ட்னெர்ஷிப் தான் இந்திய அணி ஆறுதலாக இருந்தது. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 237 ரன்களை அடித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 49, சூரியகுமார் யாதவ் 64 ரன்களை அடித்தனர்.

பின்னர் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 238 ரன்கள் அடித்த வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆனால் முதல் போட்டியை போல தொடர்ந்து விக்கெட்டை இழந்த காரணத்தால் ரன்களை அடிக்க முடியாமல் திணறியது வெஸ்ட் இண்டீஸ் அணி. அதனால் 46 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டைகளையும் இழந்து 193 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர்.

அதில் அதிகபட்சமாக ப்ரூக்ஸ் 44, ஹோஸின் 34 ரங்களையும் அடித்துள்ளார். இந்த போட்டியை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கொடுத்த பேட்டியில் ; “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ரிஷாப் பண்ட் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது”.

“ஏனென்றால் நான் எப்பொழுதும் ரிஷாப் பண்ட் 6வது அல்லது 7வது இடத்தில களமிறங்கினால் தான் சிறப்பாக இருக்கும் என்று. ரிஷாப் பண்ட் ஒரு பினிஷர். நான் கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் ஓப்பனிங் பார்ட்னெஷிப் செய்வார்கள் என்று”.

“5வது இடத்தில் ரிஷாப் பண்ட் , அடுத்ததாக வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்களை பேட்டிங் செய்ய வைத்திருக்கலாம். யாரும் மறக்க வேண்டாம், இன்னும் இந்திய அணியில் ஒருவர் விளையாட போகிறார் என்று. ரவீந்திர ஜடேஜா 7வது அல்லது 8வது இடத்தில் தான் விளையாடி வருகிறார்”.

“ரவீந்திர ஜடேஜா அதிக ரன்களை அடித்துள்ளார், அருமையமாக பீல்டிங் செய்துள்ளார். அதுமட்டுமின்றி மிடில் ஓவர்களில் சரியாக விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார் ஜடேஜா. அதனால் நிச்சியமாக இந்திய அணியில் அவர் இல்லாதது வருத்தம் தான் என்று கூறியுள்ளார் கவாஸ்கர்”.