பா… இனிமேல் இந்திய கிரிக்கெட் அணியின் பலமே இதுதான் ; இந்திய அணிக்கு இனி தோல்வியே இல்லை ; முழு விவரம் இதோ ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான தொடர் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடைப்பெற்று முடிந்துள்ளது மூன்று ஒருநாள் போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி தொடரை வென்றுள்ளனர்.

டெஸ்ட் போட்டிக்கான தொடர் :

கடந்த 14ஆம் தேதி அன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வென்று 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. அதனை தொடர்ந்து நேற்று காலை 9 மணியளவில் ஸ்ரீ பங்களா சர்வதேச மைதானத்தில் தொடங்கியுள்ளது இரண்டாவது டெஸ்ட் போட்டியில். இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் அதிகப்படியான ரன்களை அடிக்க வேண்டுமென்று முடிவு செய்த பங்களாதேஷ் அணிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஏனென்றால், தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே இருந்ததால் பார்ட்னெர்ஷிப் சரியாக அமையவில்லை. இருந்தாலும் பங்களாதேஷ் வீரரான மொமினுள் சிறப்பாக பேட்டிங் செய்து 84 ரன்களை விளாசினார். அவரது விக்கெட் இழந்த பிறகு பங்களாதேஷ் அணியால் ரன்களை அடிக்க முடியாத நிலை உருவானது.

சரியாக 73.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த பங்களாதேஷ் அணி 227 ரன்களை அடித்துள்ளனர். அதில், ஷாண்டோ 24, சாகிர் ஹசன் 15, மொமினுள் 84, ஷாகிப் 16, ரஹீம் 26, லிட்டன் தாஸ் 25 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். அதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸ்-ல் விளையாட தொடங்கியது இந்திய. இதுவரை 8 ஓவர் மட்டுமே விளையாடிய நிலையில் 19 ரன்களை அடித்துள்ளது இந்திய. அதில் கே.எல்.ராகுல் 3*, சுப்மன் கில் 14 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர்.

இந்திய அணியிக்கு கிடைத்த பலம் :

ஆமாம், கடந்த ஆசிய கோப்பை மற்றும் டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் மோசமான தோல்விக்கு முக்கியமான காரணம் பவுலிங் தான். எவ்வளவு ரன்களை அடித்தாலும், பவுலிங் பலவீனமாக இருக்கும் காரணத்தால் தொடர்ந்து தோல்வியை மட்டுமே பெற்று வருகிறது இந்திய. அதிலும் குறிப்பாக டி-20 உலகக்கோப்பை போட்டியில் தான். அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் திணறியது இந்திய. அதனால் இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியின் பவுலிங் வலுவாக இருக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. அதற்கு முக்கியமான காரணம் சிறப்பான பந்து வீச்சு தான். அதில் குலதீப் யாதவ் 8 விக்கெட்டைகளையும், சிராஜ் 4 விக்கெட்டையும், அக்சர் பட்டேல் 5 விக்கெட்டையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். அதேபோல தான் நேற்று நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளிலே அனைத்து விக்கெட்டையும் இழந்தது பங்களாதேஷ்.

அதற்கும் இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சு தான் முக்கியமான காரணம். அதில் உமேஷ் யாதவ் 15 ஓவர் பவுலிங் செய்து 25 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 4 விக்கெட்டையும், உனட்கட் 16 ஓவர் பவுலிங் செய்து 50 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 2 விக்கெட்டையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 21.5 ஓவர் பவுலிங் செய்தது 71 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 4 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதனால் 227 ரன்களை அடித்த அந்நிலையில் 10 விக்கெட்டையும் இழந்துள்ளது பங்காளதேஷ் அணி.

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெல்லுமா ? இந்திய கிரிக்கெட் அணியின் பவுலிங் இப்பொழுது வலுவாக இருக்கிறதா ?? உங்கள் கருத்தைமறக்காமல் பதிவு செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here