நல்ல கேட்டுக்கோங்க ; இவங்க இருவரும் முக்கியமான வீரர்கள் ; எப்படியாவது கைபற்றிடுங்க ; சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்

0

ஐபிஎல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் இன்று மதியம் தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். ஏனென்றால் எந்த அணியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் ;

மற்ற அணிகளை காட்டிலும் சென்னை அணிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதற்கு முக்கியமான கேப்டனான மகேந்திர சிங் தோனி. இவர் ஐபிஎல் டி-20 லீக் தொடர் இந்தியாவில் அறிமுகம் ஆனதில் இருந்தே மகேந்திர சிங் தோனி தான் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். இதுவரை சென்னை அணியை வழிநடத்திய தோனி மொத்தம் 4 முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளனர்.

ஐபிஎல் மினி ஏலம் நடைபெற போவதால் ஒரு சில வீரர்களை அணியில் இருந்து வெளியேற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதில் ப்ராவோ, ஆடம் மில்னே, ஆசிப், ஹரி நிஷாந்த், பகத் வர்மா, ராபின் உத்தப்பா, ஜெகதீஷ், கிறிஸ் ஜோர்டன் போன்ற வீரர்களை வெளியேற்றியுள்ளது சென்னை.

இன்னும் 20.45 கோடி மீதம் வைத்திருக்கும் சென்னை அணியால் சிறந்த வீரர்களை கைப்பற்ற முடியுமா ? சென்னை அணியை காட்டிலும் பஞ்சாப், சன்ரைசர்ஸ், லக்னோ போன்ற அணிகளிடம் தொகை அதிகமாக இருக்கிறது. இதுபோன்ற ஒரு முக்கியமான ஏலம் நடைபெறும் போது முன்னணி வீரர்கள் அவரவர் கருத்துக்களை சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வரிசையில் சென்னை அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, இன்று நடைபெற உள்ள ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலத்தை பற்றி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் “உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார் ஜெகதீசன். அவருக்கு கிரிக்கெட் போட்டிகளில் எந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டுமென்று நன்கு புரிந்து வைத்திருக்கிறார். அதனால் தான் தமிழக அணியில் விளையாடிய ஜெகதீசன் ஐந்து சதம் அடித்துள்ளார்.”

“அதேசமையத்தில் உனட்கட் 10 போட்டிகளில் விளையாடிய 19 விக்கெட்களை பெற்ற அணியில் ஒரு ஓவருக்கு 3.33 என்ற அடிப்படையில் தான் ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். சாம் கரன் இங்கிலாந்து அணிக்காக மற்றுமின்றி சென்னை அணியிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். பின்பு இங்கிலாந்து வீரரான பென் ஸ்டோக்ஸ்-ம் சிறப்பாக விளையாடி வருகிறார். அதனால் இந்த ஏலத்தில் சிறப்பான ஆல் – ரவுண்டர்கலை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். ஏனென்றால் இவர்களை போன்ற வீரர்கள் தான் போட்டியை மாற்றி அமைக்க கூடிய திறன் இருக்கிறது என்று கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here