நாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை ; மீண்டும் நடந்தால் மீண்டும் செய்வோம் ; இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் துணிச்சல் பேட்டி ; நடந்தது ?

0

இந்திய மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் டி-20 போட்டிக்கான தொடரில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இங்கிலாந்து அணி இருந்ததால் தொடரை கைப்பற்றினார்கள்.

ஆனால் ஒருநாள் போட்டியில் 3 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வாஷ் அவுட் செய்தது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி. ஆனால் மூன்றாவது போட்டியில் நடந்த சம்பவம் இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது. அப்படி என்ன நடந்தது ? போட்டியின் விவரம் என்ன ?

மூன்றாவது போட்டியின் சுருக்கம்:

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தனர். அதனால் முதலில் களமிறங்கியது இந்திய. எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டம் அமையவில்லை. ஏனென்றால் ஷாபாலி வர்மா, யாஸ்டிக்க, கேப்டன் ஹர்மன்பிரீத் , ஹர்லீன் போன்ற வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக விக்கெட்டை இழந்தனர்.

ஏதோ டி-20 போட்டியை போல விளையாடிய இந்திய அணி 45.4 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நிலையில் வெறும் 169 ரன்களை மட்டுமே அடித்தனர். அதில் ஸ்ம்ரிதி மந்தன 50, தீப்தி சர்மா 68, பூஜா வஸ்திரக்கர் 22 ரன்களை அதிதிகபட்சமாக அடித்துள்ளனர்.

பின்பு 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. இந்திய அணியை போலவே தொடர்ந்து விக்கெட்டை இழந்தாலும் இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாட தொடங்கினார்கள். ஆனால், 43.3 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த நிலையில் 153 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி. இதற்கிடையில் இந்திய அணியின் வீராங்கனை தீப்தி சர்மா செய்த ரன் அவுட் இப்பொழுது அனைவரையும் பேசவைத்துள்ளது. ஆமாம், கிரிக்கெட் போட்டியில் Mankad என்ற விஷயம் உள்ளது.

அதாவது பவுலிங் பக்கத்தில் இருக்கும் வீரர் பவுலர் பந்தை வீசுவதற்கு முன்பு கிரீஸ் விட்டு வெளியே சென்றால் பவுலர் அவர் பக்கத்தில் இருக்கும் ஸ்டம்ப்-ல் அடித்தால் அது ரன் அவுட் என்று ஐசிசி புதிய சட்டம் கொண்டு வந்துள்ளனர். இப்பொழுது அது தவறு என்று இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

43.3 ஓவரில் பவுலிங் செய்த தீப்தி ஷர்மாவின் பந்தை எதிர்கொண்டார் டேவிஸ். ஆனால் அந்த நேரத்தில் பவுலர் பக்கத்தில் இருந்த சார்லோட்டே டீன் தீடிரென்று பந்து போடுவதற்கு முன்பு கிரீஸ் விட்டு வெளியே சென்றார். அப்பொழுது அதனை உன்னிப்பாக கவனித்த தீப்தி சர்மா ஸ்டம்ப்-ல் அடித்து ரன் அவுட் செய்தார். அதனை நடுவரும் ரன் – அவுட் என்று உறுதி செய்தனர்.

அதனால் இங்கிலாந்து அணியின் வீராங்கனை சார்லோட்டே டீன் கண்ணீருடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார். ஆனால் இப்பொழுது இங்கிலாந்து அணியின் ஆண் வீரர்கள் தீப்தி ஷர்மாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை பற்றி பேசிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டனான ஹர்மன்ப்ரீத் ஆறுதலாக பேசியுள்ளார்.

அதில் ” உண்மையை சொல்ல போனால் மொத்தம் 10 விக்கெட்டை பற்றி தான் பேச வேண்டும். ஏனென்றால் அனைத்து விக்கெட்டையும் கைப்பற்றுவது ஒன்று அவ்வளவு சுலபம் கிடையாது. தீப்தி சர்மா செய்தது விளையாட்டு தான். அதனால் புதிதாக ஒன்றும் யாரும் எதுவும் செய்யவில்லை.”

“இது நிச்சியமாக பேட்ஸ்மேன்களுக்கு விழிப்புணர்வாக இருக்கும். நான் அனைத்து வீரர்களையும் ஆதரவாக இருப்பேன். தீப்தி சர்மா செய்தது ஒன்றும் புதிதல்ல , ரூல்ஸ்-ல் இருக்கும் விஷயம் தான் என்று துணிச்சலாக பேசியுள்ளார் ஹர்மன்ப்ரீட்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here