இதற்கு மேல் இவரை நம்பி விளையாடுவது இந்திய அணிக்கு ஆபத்து தான் ; என்ன செய்ய போகிறது பிசிசிஐ ?

0

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளது. ஆனால் டி-20 போட்டிக்கான தொடரில் மட்டும் இந்திய கிரிக்கெட் அணிக்கு மோசமான சூழல் உருவாகியுள்ளது.

ஆமாம், இதுவரை நடந்து முடிந்த இரு டி-20 போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு மோசமான தோல்வியை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, இந்திய அணியின் முன்னணி மற்றும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மோசமான நிலையில் விளையாடி வருகிறார்.

இரண்டாவது போட்டியின் விவரம் :

நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. தொடக்க வீரர்களான இஷான் கிஷான், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் அறிமுக வீரரான திலக் வர்மா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

அதனால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த இந்திய கிரிக்கெட் அணி 152 ரன்களை அடித்தனர். பின்பு 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி காத்திருந்தது. ஆமாம், தொடக்க வீரர்கள் பெரிய அளவில் ரன்களை அடிக்கவிட்டாலும் நிக்கோலஸ் பூரான் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

அதனால் 18.5 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 155 ரன்களை அடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. அதனால் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்திய அணியின் நம்பிக்கை நாயகனின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டதா ?

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார் சூர்யகுமார் யாதவ். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியை காட்டிலும் டி-20 போட்டிகளில் அதிரடியாக விளையாடி ரன்களை விலகியுள்ளார். இருப்பினும் சமீபத்தில் நடந்த போட்டிகளில் பெரிய அளவில் ரன்களை அடிப்பதில்லை என்பது தான் உண்மை.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 19, 24, 35 ரன்களையும், இதுவரை நடந்து முடிந்த இரு டி-20 போட்டிகளில் 21, 1 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதே நிலைமை தொடர்ந்து ஏற்பட்டால் இந்திய அணியின் வெற்றிக்கு ஆபத்தாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அதுமட்டுமின்றி, இன்னும் சில மாதங்களில் ஒருநாள் உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற முக்கியமான தொடர்கள் நடைபெற உள்ளது. அதனால் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தயாராக இல்லாவிட்டால், நிச்சியமாக இந்த ஆண்டும் கோப்பையை வெல்ல முடியாத நிலை ஏற்பட்ட வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் சூரியகுமார் யாதவ் இடம்பெற வேண்டுமா ? இல்லையா ? அவருக்கு பதிலாக யார் இந்திய அணியில் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்து என்ன ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here