நியூசிலாந்து டாஸ் விண்..!! அணியில் புதிய வீரருக்கு வாய்ப்பு?? ஜேசன் ராய்க்கு பதில் யார் உள்ளே??

0

முதலாவது அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரை தொடர்ந்து டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி ஏற்கனவே சூப்பர் 12 சுற்றிலிருந்து அரையிறுதிக்கு முன்னேறும் புள்ளிகள் அடிப்படையில் தொடரை விட்டு வெளியேறி உள்ளது.  முதலாவது அரையிறுதிப் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ளப்படுகின்றன. 

ஒருநாள் போட்டிகளின் நடப்பு சாம்பியன் அணியாக இங்கிலாந்து உள்ளது. அதேநேரம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை நியூசிலாந்து அணி வென்றுள்ளது. இவ்விரு அணிகளும் 2019ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை இறுதி போட்டியில் மோதின. இதில் பவுண்டரிகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டதால் இம்முறை அதற்கு பழிதீர்க்க தக்க வாய்ப்பாக எடுத்துக்கொண்டு இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும். ஆகையால் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெறும்  இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு சற்றும் பஞ்சம் இருக்காது.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை அதன் துவக்க வீரர் ஜேசன் ராய் காயம் காரணமாக வெளியேறியதால், இன்றைய ஆட்டத்தில் ஜானி பேர்ஸ்டோ துவக்க வீரராக களமிறங்க உள்ளார். அதேபோல் மிடில் ஆர்டரில் சாம் பில்லிங்ஸ் புதிதாக அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். நியூசிலாந்து அணியை பொறுத்தவரை எவ்வித மாற்றமும் இல்லாமல் இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளது .

இரு அணிகளும் பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் நல்ல நிலையில் இருக்கின்றன. அதேபோல இரு அணிகளுக்கும் இந்த தொடர் முழுவதும் நல்ல துவக்கம் கிடைத்து வந்திருக்கிறது. ஆகையால் இன்றைய போட்டியில் எந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனரோ.. அந்த அணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. 

இங்கிலாந்து அணி 

மோா்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி போ்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லா், கிறிஸ் ஜோா்டான், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஆதில் ரஷீத், கிறிஸ் வோக்ஸ், மாா்க் வுட்.

நியூசிலாந்து அணி

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டெவன் கான்வே, மாா்டின் கப்டில், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சேன்ட்னா், இஷ் சோதி, டிம் சௌதி, ஆடம் மில்னே.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here