ஐபிஎல் 2023ல் அறிமுகம் ஆக போகும் விதிமுறை ; இனி தோனியை கையில் பிடிக்கவே முடியாது ;

0

ஐபிஎல் 2023 : உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2023 போட்டிகள் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. அதனால் அனைத்து வீரர்களும் அவரவர் ஹாம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். அதில் இருந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 15 சீன்கள் நடைபெறு முடிந்த நிலையில் வருகின்ற மார்ச் இறுதியில் 16 சீசன் தொடங்க உள்ளது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் பிடித்த போட்டியாக திகழ்கிறது ஐபிஎல் டி-20 போட்டிகள். அதில் அவ்வப்போது ஒவ்வொரு விதிமுறைகளை மாற்றம் செய்து வருகின்றனர்.

அதேபோல தான் மார்ச் 31ஆம் தேதி அன்று தொடங்க இருக்கின்ற ஐபிஎல் 2023ல் ஒரு சில விதிமுறைகளை அறிமுகம் செய்ய போகின்றனர். ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் wide மற்றும் நோ-பால் காரணமாக பல போட்டிகளின் முடிவுகள் மாறியுள்ளது.

அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மட்டுமின்றி கிரிக்கெட் அணிகளுக்கும் மோதல் ஏற்படுகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் பிசிசிஐ இந்த முடிவை கையில் எடுத்துள்ளனர்.

எப்பொழுது LBW -க்கு தலா 2 ரீவ்யூ ஐபிஎல் போட்டிகளில் கொடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நோ-பால் மற்றும் wide -க்கும் அணியின் கேப்டன் Review கேட்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் போட்டியின் முடிவுகள் சரியான முறையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தோனி எப்பொழுதும் சிறப்பாக review செய்வார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அதனால் இந்த புதிய விதிமுறை மற்ற வீரர்களை காட்டிலும் தோனி-க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம். ஐபிஎல் தொடரில் எந்த மாதிரி புதிய விதிமுறையை பிசிசிஐ அறிமுகம் செய்தால் சிறப்பாக இருக்கும் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here