இந்திய அணிக்கு சாதகமாக மாறிய முடிவுகள் ; அப்போ பாகிஸ்தான் அணிக்கு ஆபத்தா ?

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டிகள் கடந்த பிப்ரவரி-ல் இருந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய.

நாளை காலை 9:30 மணியளவில் நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

எங்கு நடைபெற உள்ளது ஆசிய கோப்பை ?

எப்பொழுதும் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இனிவரும் எந்த விதமான தொடரிலும் (இந்திய மற்றும் பாகிஸ்தான்) நாடுகள் விளையாடுவது சிரமம் தானா ?

ஏனென்றால், இந்த ஆண்டு ஆசிய கோப்பை 2023 போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் தான் நடைபெறும் என்று முன்பு தெரியும். ஆனால் இந்திய கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் நாட்டுக்கு சென்று பல ஆண்டுகள் ஆகியுள்ளது.

ஆமாம், பாதுகாப்பு காரணமாக இந்திய வீரர்கள் யாரும் பாக்கிஸ்தான் நாட்டுக்கு கிரிக்கெட் விளையாட போவதில்லை. அப்படி இருக்கும்பட்சத்தில் இந்த ஆண்டு மட்டும் எப்படி இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆசிய கோப்பை போட்டியில் விளையாட பாகிஸ்தான் நாட்டுக்கு செல்வார்கள் ?

இதையும் படியுங்க : ரிஷாப் இல்லை : இதற்கு மேல் இவரை நம்பி எந்த பலனும் இல்லை ; இவர் மீண்டு வர 1.5 வருடம் ஆகலாம் ; முன்னாள் வீரர் ஓபன் டாக்

சமீபத்தில் தான் ஜே ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சில்-ன் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அதனால் இந்திய வீரர்கள் யாரும் பாகிஸ்தான் நாட்டுக்கு வர போவதில்லை. அதனால் பொதுவான இடத்தில் போட்டிகளில் வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் உறுப்பினர்கள், அப்படி இந்திய வீரர்கள் ஆசிய கோப்பை விளையாட பாகிஸ்தான் நாட்டுக்கு வரவில்லை என்றால், ஒருநாள் உலகக்கோப்பை விளையாட நாங்கள் (பாகிஸ்தான்) இந்தியாவிற்கு வரமாட்டோம் என்று உறுதியாக கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, சமீபத்தில் வெளியான தகவலின் இதில் இந்திய நாட்டின் அரசாங்கம் தான் முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றனர். ஆனால் இந்திய வீரர்கள் யாரும் ஆசிய கோப்பையை விளையாட பாகிஸ்தான் நாட்டுக்கு போகப்போவதில்லை என்று உறுதியாக கூறியுள்ளது பிசிசிஐ.

இப்படி ஏற்படும் பிரச்சனை சரியான ஒன்றா ? ஏனென்றால் இது ஒரு விளையாட்டு போட்டி அதனால் மற்ற நாடுகளுக்கு சென்று அவ்வப்போது விளையாடினால் தான் எதிர் அணியை எப்படி சமாளிக்க முடியும் என்பது தெரியவரும்.