ரிஷாப் இல்லை : இதற்கு மேல் இவரை நம்பி எந்த பலனும் இல்லை ; இவர் மீண்டு வர 1.5 வருடம் ஆகலாம் ; முன்னாள் வீரர் ஓபன் டாக்

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை நடைபெற்று முடிந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டியிலும், ஆஸ்திரேலியா அணி 1 போட்டியிலும் வென்றுள்ளனர். இதனை தொடர்ந்து நான்காவது போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.

இந்திய அணியின் முன்னணி வீரர் இல்லாதது பிரச்சனையா ?

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் பும்ரா கடந்த பல போட்டிகளில் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அது ஏன்..! கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்று முடிந்த டி-20 போட்டியிலும் பும்ரா விளையாடவில்லை.

அதனால் அவருக்கு பதிலாக ஷமி, உமேஷ் யாதவ் போன்ற வீரர்கள் அணியில் விளையாடி வருகின்றனர். இருப்பினும் இந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் விளையாட வேண்டுமென்ற காரணத்தால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் பும்ரா விளையாட போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியிலும் பும்ராவின் பங்களிப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. பும்ரா இல்லாதது இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவாக இருக்குமா ? என்று பல கேள்விகள் எழுந்து வருகிறது.

இதையும் படியுங்க : இறுதி டெஸ்ட் போட்டியில் இவருக்கு இடமில்லை ; உறுதியாக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி ;

பும்ராவை விடுங்க அது தான் இவர் அணியில் இருக்காரே….! இதனை பற்றி பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மதன் லால் கூறியுள்ளார். மேலும் இதனை பற்றி கூறுகையில் :

“தயவு செய்து பும்ராவை விடுங்க..! மீண்டும் அவர் இந்தியா அணிக்கு திரும்பும்போது பார்த்துக்கொள்ளலாம். உடனடியாக அவர் (பும்ரா) விளையாடுவார் என்று சொல்ல முடியுமா ? 1 வருடம் ஆகலாம் அல்லது 1.5 வருடம் கூட ஆகலாம். ஏனென்றால் அவரது காயம் அந்த அளவிற்கு பெரியது.”

“சுமார் 6 மாதங்களாக அவர் போட்டிகளில் விளையாடவில்லை. அப்படியே திரும்பினாலும் அவரது பெஸ்ட் கிடைக்குமா ? இந்திய கிரிக்கெட் அணிக்கு. அதனால் அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் -ஐ அணியில் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மதன் லால்.”

கடந்த 6 மாதங்களாக விளையாடாத நிலையில் இருக்கும் பும்ரா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினால் சிறப்பாக விளையாடுவாரா ? இல்லையா ? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு எந்த வேகப்பந்து வீச்சாளர் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here