இப்படி விளையாடு அப்போதான் ஜெயிக்க முடியும் என்று இவர் தான் சொன்னார் ; கே.எல்.ராகுல் ஓபன் டாக் ;

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஒரு போட்டியில் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி புள்ளிபட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளனர்.

முதல் போட்டி சுருக்கம் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா :

சென்னையில் நடைபெற்று முடிந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 199 ரன்களை மட்டுமே அடித்தனர். பின்பு 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய.

ஆனால், ரோஹித் சர்மா, இஷான் கிஷான் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டை பறிகொடுத்தனர். அதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும், கே.எல்.ராகுல் மற்றும் விராட்கோலியின் பங்களிப்பு இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக மாறியது.

விராட்கோலி 85, கே.எல்.ராகுல் 97* ரன்களையும் அடித்துள்ளனர். அதனால் 6 விக்கெட்டை வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி வென்றது. சமீபத்தில் அளித்த பேட்டியில் விராட்கோலி உங்களிடம் ஏதாவது சொன்னாரா ? பார்ட்னெர்ஷிப் செய்யும்போது என்று கேள்வி எழுந்தது.

அதற்கு பதிலளித்த கே.எல்.ராகுல் ” உண்மையிலும் நாங்க அதிகமாக பேசவே கிடையாது. நானும் பொறுமையாக அடித்து விளையாட வேண்டுமென்று முடிவு செய்தேன். அப்பொழுது விராட்கோலி என்னிடம் – இப்பொழுது அதிரடியாக விளையாடுவது கொஞ்சம் சிரமம் தான், அதனால் டெஸ்ட் போட்டியை போலவே விளையாடு என்று கூறினார்.

“பின்பு போக போக இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாட வாய்ப்பு கிடைத்தது. நானும் சதம் அடிக்க முயற்சி செய்தேன். அதனால் தான் இறுதி நேரத்திலும் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாசினேன். ஆனால் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது என்று கூறியுள்ளார் கே.எல்.ராகுல்.”