நெருங்கும் ஐ.பி.எல். போட்டிகள்… விலகும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்!

0

2023- ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31- ஆம் தேதி அன்று மாலை குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

நடப்பு ஐ.பி.எல். தொடர்பில், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றனர்.

நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டி, மார்ச் 31- ஆம் தேதி அன்று இரவு நரேந்திர மோடி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றுள்ள வீரர்களின் முன்னணி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இருந்து, முழுமையாக அடுத்தடுத்து விலகி வருகின்றனர்.

அதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் ஐ.பி.எல்.லில் பங்கேற்பாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, அணியின் நிர்வாகமும் எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான புதிய ஜெர்சியை கொல்கத்தா அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதேபோல், பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கும் இங்கிலாந்து அணியின் வீரர் ஜானி பேர்ஸ்டோ, நடப்பு ஐ.பி.எல். தொடரில் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் கவனம் செலுத்தவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடம் பிடித்துள்ள ரஜத் படிதார் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, ஐ.பி.எல்.

போட்டிகளில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அந்த வீரரும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவது கேள்வி குறியாகியுள்ளது.

முன்னணி வீரர்கள் காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here