ஐபிஎல் 2021; வருகின்ற ஏப்ரல் மாதம்9ஆம் தேதி நடைபெற உள்ளது அதுவும் கடந்த ஆண்டு போல் இல்லாமல் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் பல கட்டுப்படுகளுடன் நம் இந்தியாவில் உள்ள மைதானத்தில் நடைபெற இருக்கின்றது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து அணியின் வீரர் ஜோஸ் பட்லர் , சமீபத்தில் அளித்த பேட்டியில் ஐபிஎல் போட்டி மிகவும் முக்கியமான ஒன்று என்றும் அதனை நிச்சயமாக தவிர்க்க முடியாது என்றும் கூறியுள்ளார் ஜோஸ் பட்லர். அதுமட்டுமின்றி ஒருவேளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு வந்தால் என்னால் நிச்சியமாக நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட முடையது என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டி மிகவும் குறுகிய காலம் தான் ஆனால் இந்த ஐபிஎல் போட்டியின் மூலம் பல அனுபவங்கள் மற்றும் நிறைய சம்பளம் மற்றும் பரிசு தொகைகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார் ஜோஸ் பட்லர். ஐபிஎல் வந்தாலே பல கோடி ரூபாய் காசுகள் இங்கு விளையாடும்.
அதேபோல பல கோடி ரூபாய் சம்பளத்தில் முக்கியமான சில வீரர்கள் உள்ளனர். அதில் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் , ஜோப்பிர ஆர்ச்சர் , மொயீன் அலி , சாம் குரான் ,டாம் குரான் போன்ற வீரர்கள் இதில் உள்ளடங்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சாம் சுரன் என்ன சொன்னாரோ அதேமாதிரி தான் ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். ஐபிஎல் என்றாலே அது ஒரு திருவிழா போல இந்தியாவில் நடைபெறும். அதில் பல சுவாரஷியமான போட்டிகள் மற்றும் பல காட்சிகள் அவளோ அழகாகவும் அருமையாகவும் அமையும் அதுதான் ஐபிஎல் போட்டி.