ஐபிஎல் 2021; வருகின்ற ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. அதுவும் பல கட்டுப்பாடுகளுடன் , முதலில் நடக்கும் சில போட்டிகளில் கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் அனுமதி இல்லை என்றும் பிசிசிஐ கூறியுள்ளதால் பல கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
கடந்த ஐபிஎல் 2020 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சரியான பேட்டிங் மற்றும் பௌலிங் அமையவில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் பல போட்டிகளில் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்லே – ஆப் சுற்றுக்குள் போக முடியாமல் போகிவிட்டது.
ஐபிஎல் வரலாற்றில் அதுவே முதல் முறை சென்னை சூப்பர் கிங்ஸ் ப்லே – ஆப்க்கு போகாமல் வெளியேறியது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சென்னை வீரர்களும் சோகத்தில் மூழ்கினார். அதற்கு முக்கியமான காரணம் ஓப்பனிங் சரியாக அமையவில்லை என்று கூட சொல்லலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவர்கள் தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ; குழப்பத்தில் ரசிகர்கள் …
பிப்ரவரி மாதத்தில் நடந்த ஐபிஎல் 2021கான ஏலத்தில் ராபின் உத்தப்பாவை எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இவர் இதற்கு முன்னாள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆர்டரில் டுப்ளஸிஸ் , வாட்சன், ருதுராஜ் ஆகிய மூவரும் மாத்தி மாத்தி களம் இறங்கி வந்தனர். ஆனால் வாட்சன் அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ், டுப்ளஸிஸ் தான் ஓப்பனிங் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கபட்ட நேரத்தில் ராபின் உத்தப்பா வந்துள்ளார்.
அதனால் தென்னாபிரிக்கா கேப்டன் டுப்ளஸிஸ் மற்றும் ராபின் உத்தப்பா களம் இறங்குவர் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் இவர் இருவரும் ஐபிஎல் போட்டிகளில் பல முறை விளையாடியுள்ளனர். அனுபவம் நிச்சயம் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் ருதுராஜ் ராஜ் எப்போது பேட்டிங் செய்வார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது? ஏனென்றால் ஒன்-டவுனாக ரெய்னா நிச்சியமாக களம் இறங்குவார் அதில் எந்த மாற்றமும் இல்லை . ஒருவேளை 4வதாக ருதுராஜ் பேட்டிங் செய்தால் அது சரியாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.