CSK-வில் Groupism இருக்கிறதா… ஸ்டீபன் பிளெமிங் அளித்த பேட்டி…! முழு விவரம் இதோ..!

ஐபிஎல் 2021, டி-20 லீக் போட்டி தொடரின் 27வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. நேற்று இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்கத்தில் சில தயக்கம் இருந்தாலும், அதன்பின்னர் அதிரடியாக விளையாடிய சிஎஸ்கே வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் 4 விக்கெட்டை இழந்து 218 ரன்களை எடுத்துள்ளனர்.

அதில் ருதுராஜ் கெய்க்வாட் 4 ரன்கள், டுப்ளஸிஸ் 50 ரன்கள், மொயின் அலி 58 ரன்கள், சுரேஷ் ரைனா ரன்கள், அம்பதி ராயுடு 72 ரன்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜா 22 ரன்களை விளாசியுள்ளனர். தொடக்கத்தில் ருதுராஜ் விக்கெட் உடனடியாக இழந்தாலும், அதன்பின்னர் பின்னர் பேட்டிங் செய்த மொயின் , ராயுடு போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி உள்ளார்.

பின்பு 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி ஓவர் வரை போராடி 6 விக்கெட் இழந்த நிலையில் 219 ரன்களை எடுத்து வெற்றியை கைப்பற்றியுள்ளனர், மும்பை இந்தியன்ஸ் அணி. புள்ளிபட்டியலில் 4வது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் அளித்த பேட்டியில் ; சென்னை அணியில் என் சில முக்கியமான வீரர்களுக்கு மட்டும் ஆதரவு கொடுத்து கொண்டு இருக்கீங்க? இளம் வீரர்களுக்கு ஏன் இன்னும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை ? சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் Groupism இருக்கிறதா? என்ற கேள்விக்கு ;

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை சில போட்டிகளில் வீரர்கள் அமைந்துவிட்டால், அணி வீரர்கள் மாறுவது கடினம் தான். அதுதான் அனைத்து அணியிலும் நடந்து வருகிறது. அதேபோல தான் சிஎஸ்கே அணியிலும்.

groupism அப்படி ஒன்றும் இல்லை, எங்களுக்கு அணைத்து வீர்ரகளும் ஒன்றுதான். சிஎஸ்கே அணி முதல் சில போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டால் , நிச்சியமாக சில போட்டிகளில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க படும் என்று கூறியுள்ளார் ஸ்டீபன் பிளெமிங்.