கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் பிரபலமான ஒன்று என்றால் அது ஐபிஎல் போட்டிதான். ஏனென்றால் ஐபிஎல் வந்தாலே போதும் இந்தியா முழுவதும் ஒரே கொண்டாட்டமாக தான் இருக்கும். ஏனென்றல் இதில் பல இந்தியா கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல வெளிநாட்டு வீரர்களும் விளையாடி வருகின்றனர்.
இப்பொழுது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு டி-20 போட்டிகளை நடைபெற்று வருகிறது. முதல் போட்டி சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா அணி, சிறிது மற்றம் செய்ய விராட் கோலி முடிவு செய்துள்ளார் அதன்விளைவாக தவானுக்கு பதிலாக இஷான் கிஷான் இடம் பெற்றார். சூரிய குமார் யாதவ் இனி வரும் போட்டிகளில் எதிர்பாக்கலாம்.
நேற்று நடந்த இரண்டாவது டி-20 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான பௌலிங்கை தொம்சம் செய்த இஷான் கிஷானுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அதுவும் 23 பந்தில் 56 ரன்களை எடுத்துள்ளார் இஷான் கிஷான்.
இவர் இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் எனப்து எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. இவரது ஆட்டத்தை ஐபிஎல் போட்டியில் காண ஐபிஎல் ரசிகர்கள் கூட்டம் காத்துகொண்டு இருக்கின்றது. 2021 ஆம் ஐபிஎல் போட்டியில் இருவரும் நிச்சயமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருப்பது சந்தேகம் தான்?
என் தெரியுமா? அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022 ஆண்டில் புதிதாக இரு அணிகள் வரப்போவதாக தகவல்கள் வெளியானது. அதனால் நிச்சயமாக 2022 அப்பொழுது மிகப்பெரிய ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நடைபெறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
அப்படி நடக்கும்பொழுது நிச்சயமாக 3 வீரர்களை மட்டுமே ஒரு ஒரு அணியும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி பார்த்தால் நிச்சயமாக மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மா , பௌலிங்கில் பும்ரா மற்றும் ஆல்-ரவுண்டரில் ஹர்டிக் பாண்டிய ஆகிய மூவரை மட்டும் தான் தக்க வைத்துக்கொள்ள முடியும்.
அதனால் நிச்சியமாக 2022 ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணியில் இவர்கள் இருவரையும் பார்ப்பது கடினம். இந்த நிலைமை மும்பை எ=இந்தியன்ஸ் அணிக்கு மட்டுமில்லை எல்ல ஐபிஎல் அணிகளுக்கும் இந்த நிலைமைதான். அதனால் நிச்சியமாக 2022 ஆண்டு ஐபிஎல் போட்டி மிகவும் ச=சுவாரஷியமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.