தலையில் அடிபட்டு மருத்துவ மனையில் உள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ; முழு விவரம் இதோ

நேற்று இரவு 7 மணியளவில் நடைபெற்ற டி20 போட்டியில் களமிறங்கியது இந்திய மற்றும் இலங்கை அணி. அதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. தொடக்க வீரர்களான நிஷங்க மற்றும் குணத்திலக்க போன்ற இருவரும் ஆட்டம் இழந்த பிறகு சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 183 ரன்களை அடித்துள்ளது இலங்கை.

பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் கலமிறங்கியது இந்திய கிரிக்கெட் அணி. இந்த முறை ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் போன்ற இருவரும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. அதன்பின்னர் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 74 ரன்களையும் , ரவீந்திர ஜடேஜா 45 ரன்களையும் அடித்தனர். அதனால் 17.1 ஓவர் முடிவில் 186 ரன்களை அடித்த இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய அணி.

அதில் ரோகித் சர்மா 1, இஷான் கிஷான் 16, ஷ்ரேயாஸ் ஐயர் 74, சஞ்சு சாம்சன் 39, ரவீந்திர ஜடேஜா 45 ரன்களை அடித்துள்ளனர். இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றியை பெற்றுள்ளது. அதனால் 2 – 0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார் இஷான் கிஷான். இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் 89 ரன்களை அடித்து தொம்சம் செய்தார். ஆனால் இரண்டாவது போட்டியில் 16 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஆனால் அதற்கு முன்பு 3 வது ஓவர் பந்து வீசினார் இலங்கை பவுலர் குமாரா…!

அப்பொழுது இஷான் கிஷான் தலையில் பலமாக அடிபட்டது. அதனால் சிறிது நேரம் போட்டி நிறுத்தப்பட்டது. சமீபத்தில் வெளியான தகவலின் படி இஷான் கிஷான் இப்பொழுது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு சி.டி. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதுமட்டுமின்றி இன்னும் மருத்துவர் பரிசோதனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இன்று நடைபெற உள்ள மூன்றாவது போட்டியில் நிச்சியமாக இஷான் கிஷான் இடம்பெறுவதற்க்கான வாய்ப்பு இருக்காது. ஆனால் கூடிய விரைவில் குணமாகி இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.