பொக்கிஷமாக வைத்திருந்த வீரரை வெளியேற்றியது மும்பை ; அப்போ அவ்வளவு தான??

0

ஐபிஎல் 2023 : கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று தொடங்கிய ஐபிஎல் 2023 போட்டிகள் வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகிறது. இதுவரை 33 போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

புள்ளிபட்டியலில் விவரம் :

  1. குஜராத் டைட்டன்ஸ்
  2. சென்னை சூப்பர் கிங்ஸ்
  3. மும்பை இந்தியன்ஸ்
  4. லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்
  5. ராஜஸ்தான் ராயல்ஸ்
  6. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  7. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  8. பஞ்சாப் கிங்ஸ்
  9. சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத்
  10. டெல்லி கேபிட்டல்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணி :

இதுவரை ஐபிஎல் தொடரில் அதிகமுறை கோப்பையை வென்ற அணியாக திகழ்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. அதிபட்சமாக 5 முறை கோப்பையை வென்றுள்ளனர். இருப்பினும் கடந்த இரு ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் மோசமான நிலையில் இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

அதேபோல தான் இந்த ஆண்டு ஐபிஎல் 2023 முதலில் விளையாடிய போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே பெற்று வந்த மும்பை இந்தியன்ஸ் அணி இறுதியாக விளையாடிய போட்டிகளில் வென்று புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்தை கைப்பற்றியுள்ளனர். இருப்பினும் இன்னும் இரு போட்டிகளில் வென்றால் மட்டுமே ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

முக்கியமான வீரரை வெளியேற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி :

மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் 8 கோடி விலை கொடுத்து இங்கிலாந்து வீரரான ஆர்ச்சர்-ஐ கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி. அதுமட்டுமின்றி, காயத்தில் இருந்த ஆர்ச்சர் நிச்சியமாக 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு இல்லை என்று தெரிந்து கொண்டு தான் மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியது.

பின்பு இந்த ஆண்டு தொடரில் விளையாடுவார், நிச்சியமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வலுவான பவுலிங் அமையும் என்று பலர் நினைத்தனர். இருப்பினும் அவ்வப்போது காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடி கொண்டு வந்தார் ஆர்ச்சர்.

அதனால் உடனடியாக ஜோப்பிர ஆர்ச்சருக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டனை தேர்வு செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இருப்பினும் நேற்று பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய கிறிஸ் ஜோர்டன் 4 ஓவர் பவுலிங் செய்து 48 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here