இந்திய அணியில் இருந்து இவரை வெளியேற்றியது முட்டாள் தனமான முடிவு தான் ; கொஞ்சம் கூட யோசனை செய்ய மாட்டிங்களா ; முன்னாள் வீரர் ஆவேசம் ;

மேன் ஆஃப் தி மேட்ச் விருது பெற்ற வீரரை இந்திய அணியில் இருந்து வெளியேற்றியது கொஞ்சம் கூட நியாயம் கிடையாது என்று ஆவேசமாக பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர்.

டெஸ்ட் போட்டிக்கான தொடர் :

பங்களாதேஷ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரு டெஸ்ட் போட்டிக்கான தொடர் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 404 ரன்களை அடித்தனர். பின்பு 405 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது பங்களாதேஷ் அணி. ஆனால் 150 ரன்களை மட்டுமே அடித்தது பங்களாதேஷ் அணி.

அதனால் 254 ரன்கள் முன்னிலையில் இருந்தது இந்திய கிரிக்கெட் அணி. பின்பு இரண்டாவது இன்னிங்ஸ்-ல் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 2 விக்கெட்டை இழந்த நிலையில் 258 ரன்களை அடித்தனர். கிட்டத்தட்ட 512 ரன்கள் முன்னிலையில் இருப்பதால் Declare செய்தது இந்திய. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 324 ரன்களை மட்டுமே அடித்தது பங்களாதேஷ் அணி.

அதனால் 188 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வென்றுள்ளது இந்திய. அதனால் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது இந்திய. அதனை அடுத்து நேற்று காலை முதல் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்தனர்.

அதனால் 73.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 227 ரன்களை அடித்திருக்கிறது பங்களாதேஷ் அணி. அதில் மொமினுள் 84, ஷாண்டோ 24, ரஹீம் 26, லிட்டான் தாஸ் 25 ரன்களை அதிகபட்சமாக அடித்திருக்கின்றனர். பின்பு பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி 8 ஓவர் முடிவில் 19 ரன்களை அடித்துள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக பேட்டிங் செய்திருந்தாலும், பவுலிங்-ல் அருமையாக பவுலிங் செய்த குல்தீப் யாதவ் தான் முதல் டெஸ்ட் போட்டியில் ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை பெற்றுள்ளார். ஆனால் அவர் இரண்டாவது போட்டியில் இல்லாததை பற்றி முன்னாள் வீரரான கவாஸ்கர் சில முக்கியமான கருத்தை பதிவு செய்துள்ளார்.

அதில் “ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் விருது பெற்ற வீரரை அணியில் இருந்து வெளியேற்றியது சத்தியமாக நம்பவே முடியவில்லை. இதற்கு மேல் என்னால் எந்த விதமான வார்த்தையை போட்டு பேச முடியாது. 20 விக்கெட்டில் கிட்டத்தட்ட பாதி என்ற நிலையில் 8 விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார் குல்தீப் யாதவ். அவரை எப்படி வெளியேற்றம் செய்தீர்கள் ? அணியில் இரு சுழல் பந்து வீச்சாளர் இருக்கின்றனர். அதில் குல்தீப் யதாவுக்கு பதிலாக மற்ற ஒருவரை வெளியேற்றம் செய்திருக்கலாம். 8 விக்கெட்டை கைப்பற்றிய வீரரான குல்தீப் யாதவ் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.”