இவருக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்க ; முதலில் இந்தியாவில் சரியாக விளையாட சொல்லுங்க பா ; முன்னாள் வீரர் பேட்டி ;

தொடர் போட்டிகள் :

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரில் விளையாடி வருகின்றனர். அதில் 1 – 0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி முன்னிலையில் இருக்கிறது நியூஸிலாந்து அணி.

மோசமான நிலையில் விளையாடி வரும் விக்கெட் கீப்பர் :

சமீப காலமாகவே இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட்/பேட்ஸ்மேனான ரிஷாப் பண்ட் -ன் பங்களிப்பு மிகவும் மோசமான நிலையில் விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக, தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் இடம்பெற்றதில் இருந்து மோசமான நிலையில் விளையாடி வருகிறார். போதுமான அளவிற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு தான் வருகிறார். ஆனால் அதனை சரியாக பயன்படுத்துகிறாரா ? இல்லையா ? என்று கேட்டால் இல்லை என்பது தான் உண்மை.

அதனால் தான் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடந்து முடிந்த டி-20 போட்டிக்கான தொடரில் 6,11 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். அதேபோல நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 15 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்துள்ளார் ரிஷாப் பண்ட். இதே நிலைமை தொடர்ந்தாள் நிச்சியமாக இந்திய அணியின் பேட்டிங் மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய அணியின் முன்னாள் வீரரின் பேட்டி :

“எனக்கு தெரிந்து ரிஷாப் பண்ட் -க்கு கொஞ்சம் ஓய்வு. அதனால் கொஞ்சம் பொறுத்திருந்து இந்தியாவிற்கு வந்து விளையாட்டும். இந்திய அணியால் அவரை சமாளிக்க முடியவில்லை. இன்னும் சில போட்டிகளில் அவரை போட்டியில் இருந்து வெளியேற்றுங்கள். ஆமாம், ஏனென்றால் ரிஷாப் பண்ட் கொடுக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துவது இல்லை. அதனால் எனக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது.”

“சமீப காலமாகவே ரிஷாப் பண்ட் சரியாக விளையாடுவதில்லை. அதனால் அவருக்கு அழுத்தம் ஏற்பட்டு வருகிறது. மீண்டும் அவரது போர்மை கொண்டு வர வேண்டும். அதனால் சரியான விஷயங்களை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த்.”

ட்விட்டரில் புலம்பும் கிரிக்கெட் ரசிகர்கள் :