விராட்கோலி, ரோஹித் இல்லையென்றால் மட்டும் தான் இவர் கண்ணுக்கு தெரியும் போல ; கம்பேக் கொடுப்பாரா ?

0

சமீபத்தில் தான் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடந்த முடிந்துள்ளது. அதில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி.

இன்று முதல் மூன்று டி-20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிக்கான தொடர் போட்டி இப்பொழுது நடைபெற உள்ளது. இதில் கேப்டனாக ரோஹித் சர்மா தான் இந்திய அணியை வழிநடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், அவரால் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு , வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி-20 போட்டியில் விளையாட உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. அதில் ரோஹித் சர்மா, விராட்கோலி போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் தான் கேப்டனாக வழிநடத்த உள்ளார். துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது இந்திய.

இந்திய அணியின் விவரம் :

ஷிகர் தவான் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுமன் கில், தீபக் ஹூடா, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், ஷர்டுல் தாகூர், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், அவேஷ் கான், பிரஷித் கிருஷ்ணா, முகமது சிராஜ் மற்றும் அர்ஷதீப் சிங்.

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இருந்து ஷிகர் தவானுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் போதுமான அளவிற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஐபிஎல் டி-20 2022யில் சரியாக விளையாடாத காரணத்தால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி- மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெற்றவில்லை என்பது தான் உண்மை.

ஆனால் ரோஹித் சர்மா, விராட்கோலி, ஹர்டிக் பாண்டிய, பும்ரா, போன்ற வீரர்கள் இல்லையென்றால் தான் ஷிகர் தவான் பெயர் நியாபகத்திற்கு வருகிறது போல. ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மாவுடம் களமிறங்க சுமன் கில் உள்ளார். இனிவரும் போட்டிகளில் சுமன் கில் சரியாக விளையாடாமல் போனால்.

பின்பு நிச்சியமாக ஷிகர் தவானுக்கு இந்திய அணியில் இடம்பெற கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஷிகர் தவான் இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் தான ? இல்லையா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here