நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் களமிறங்க போகிறார்.. ஆல்-ரவுண்டர் ; ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர் ; யார் அது ?

சில தினங்களுக்கு முன்பு ஒரு சில வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அதிரடியாக ஐபிஎல் 2021 போட்டியை பாதியில் நிறுத்தியுள்ளனர் பிசிசிஐ. மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்க படுகிறது.

கடந்த ஜனவரி 2021,மாதத்தில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20, ஒருநாள் மட்டும் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றது. அதில் எதிர்பாராத விதமாக ஜடேஜாவின் கையில் அடிபட்டுவிட்டது. அதனால் பாதி போட்டியில் இருந்து விலகினார் ஜடேஜா.

அதன்பிறகு மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் 2021 போட்டியில் களமிறங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பான முறையில் பீல்டிங் , பவுலிங் மற்றும் பேட்டிங் செய்துள்ளார் ஜடேஜா. அவரது அசத்தலான ஆட்டத்தால் சென்னை அணி பல வெற்றிகளை கைப்பற்றியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜடேஜா கையில் அடிபட்டதால், அதன்பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான எந்த தொடரிலும் விளையாட முடியாமல் போய்விட்டது. இப்பொழுது பிசிசிஐ வெளியிட்ட உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் ரவீந்திர ஜடேஜாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. நீண்ட நாட்கள் கழித்து ரவீந்திர ஜடேஜா இந்திய அணியில் பெயர் இடம்பெற்றுள்ளது. அதனால் நிச்சியமாக ஜடேஜாவின் ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. அதுமட்டுமின்றி ஹார்டிக் பாண்டிய இல்லாத சமையத்தில் ஜடேஜாவின் முக்கியமான பங்களிப்பு மிகவும் முக்கியம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மட்டுமின்றி ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற போகிறன்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் ஜடேஜா இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில போட்டிகளில் ஜடேஜாவின் ஆட்டம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

ஆனால் சமீபத்தில் வெளியான இந்தியா வீரர்களுக்கான சம்பள பட்டியலில் ஜடேஜாவுக்கு A+ கிரேட் கொடுக்கப்படவில்லை. ஏன் அவருக்கு A+ சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கல் வாகன் கூறியுள்ளார்.