வீடியோ ; சுலபமான Catch- ஐ தவறவிட்ட CSK கேப்டன் ரவீந்திர ஜடேஜா ..! easy ஆ ..! பிடிக்கலாம்லா ?

இன்று இரவு நடைபெற்று வரும் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றனர். இதுவரை இந்த சீசன் ஐபிஎல் போட்டிகளில் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்.

ஆமாம், இதுவரை மும்பை அணி எந்த போட்டியிலும் என்றதே இல்லை. சென்னை அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியை கைப்பற்றியுள்ளது. அதனால் இரு அணிகளுக்கும் இன்றைய போட்டி மிகவும் முக்கியமான ஒன்று. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பவுலிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் எந்த ரன்களையும் கைப்பற்றாமல் ஆட்டம் இழந்தனர். அதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையாமல் திணறிக்கொண்டே விளையாடு வருகின்றனர்.

இதுவரை 18 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்களை அடித்த நிலையில் 5 விக்கெட்டை இழந்துள்ளது. இதற்கிடையில், 11.5 ஓவரில் பவுலிங் செய்தார் மிச்சேல் சண்ட்னர் வீசிய பந்து வீச்சை எதிர்கொண்டார் திலக் வர்மா. அப்பொழுது அவர் அடித்த பந்து உயரமாக சென்றது.

அதனை பிடிக்க ஜடேஜா முன்வந்தார். சுலபமாக பிடிக்க வேண்டிய கேட்ச் ஐ தவறவிட்டார். நம்ம ஜடேஜா, கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மிகவும் கடினமான கேட்ச் ஐ மிகவும் துல்லியமாக பிடிப்பார். ஆனால் கேப்டன் பதவிவுக்கு வந்த பிறகு ஜடேஜாவின் விளையாட்டில் பல மாற்றங்கள் உள்ளனர்.

வீடியோ ;

இதுவரை ரவீந்திர ஜடேஜா 7 போட்டிகளில் விளையாடி 88 ரன்களை அடித்துள்ளார். அதில் அதிகபட்சமாக 26 ரன்களை கைப்பற்றியுள்ளார் ரவீந்திர ஜடேஜா. பவுலிங்கில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.