வீடியோ ; ப்ராவோ -வை கட்டி முத்தம் கொடுத்தார் பொல்லார்ட் …! ரசிகர்கள் நெகிழ்ச்சி..!

0

ஐபிஎல் 2022 : இன்று இரவு 33வது போட்டியில் சென்னை அணியம் , மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடி வருகின்றனர். இதுவரை இந்த இரு அணிகளும் மொத்தம் 32 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் மும்பை அணி அதிகபட்சமாக 19 போட்டிகளிலும், சென்னை அணி 13 போட்டிகளிலும் வென்றுள்ளது.

இருப்பினும், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது மும்பை மற்றும் 9வது இடத்தில் உள்ளது சென்னை அணி. அதுமட்டுமின்றி, இனிவரும் போட்டிகள் நிச்சியமாக சென்னை அணிக்கு மற்றும் மும்பை அணிக்கும் மிகவும் முக்கியமான போட்டியாகும்.

இதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. இருப்பினும் அவ்வப்போது பேட்டிங் செய்த வீரர்கள் முடிந்த வரை ரன்களை அடித்து வந்தனர்.

அதனால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த மும்பை அணி 155 ரன்களை அடித்துள்ளது. அதில் அதிகபட்சமாக திலக் வர்மா 51, ஹ்ரித்திக் ஷாக்கீன் 25, உனட்கட் 19,பொல்லார்ட் 14, சூர்யகுமார் யாதவ் 32 ரன்களை அடித்துள்ளனர். இப்பொழுது 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது சென்னை அணி.

இதற்கிடையில்,14 வது ஓவர் இறுதி பந்தியை வீசினார் ப்ராவோ, அதனை எதிர்கொண்டார் மும்பை வீரர் பொல்லார்ட். அதனை ஸ்டோக் வைத்தார். அப்பொழுது அந்த பந்து ப்ராவோ கையுக்கே சென்றது. அப்பொழுது ப்ராவோ ரன் அவுட் செய்வது போல நினைத்து பந்தை தோனிக்கு வீசினார், அதனை அடிப்பது போல பொல்லார்ட் சைகை காட்டினார்.

பின்னர் ப்ராவோ பக்கத்தில் வந்தவுடன் அவரை கட்டி அனைத்து ப்ராவோ தலையில் முத்தம் கொடுத்தார் பொல்லார்ட். இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் நெகிழ்ச்சியில் உள்ளனர். எப்பொழுதும் இந்த மாதிரி தேவையில்லாமல் பந்தை பொல்லார்ட் பக்க வீசினால் எப்பொழுதும் கோவப்படும் பொல்லார்ட், இந்த முறை இப்படி செய்தது ஆச்சரியமாக தான் உள்ளது.

அதுமட்டுமின்றி, இன்று பொல்லார்ட் நான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று உறுதியான முடிவை எடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here