இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் , 5 டி-20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டி நடத்த போவதாக பிசிசிஐ கூறியுள்ளனர். அதன்படி இப்பொழுது டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகள் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது.
அதிலும் இந்தியா அணிதான் டெஸ்ட் சீரியஸ் மற்றும் டி – 20கான கோப்பையை கைப்பற்றியுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த இந்தியா கிரிக்கெட் ரசிகர்களும் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். அடுத்த படியாக ஒரு நாள் போட்டி நாளை முதல் தொடங்க உள்ளது.
அணிகளில் யார் யார் இடம் பெறுவார் என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இந்தியா அணியில் குர்னல் பாண்டிய மற்றும் பிரஷித் ஆகிய இரு வீரர்களும் இந்தியா அணியில் டி-20 போட்டிகள் போதே இணைந்துள்ளனர். ஆனால் இன்னும் இந்தியா அணியில் யார் யார் விளையாட போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள் : இந்த மூன்று வீரர்கள் இல்லாமையிலேயே இந்தியா அணி இங்கிலாந்து அணியை வென்றுள்ளது ; ஆகாஷ் சோப்ரா …யார் அந்த வீரர்கள்..!!
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இவர் இல்லையாம் ; சந்தோஷத்தில் இந்தியா கிரிக்கெட் ரசிகர்கள்..!
இந்நிலையில் இங்கிலாந்து அணி அவர்களுது அணியை அறிவித்துள்ளது. அதில் இங்கிலாந்து அணியின் முக்கியமான பௌலர் ஆர்ச்சர் இல்லை என்ற செய்தியை இங்கிலாந்து அணியினர் கூறியுள்ளனர். அவருக்கு காலில் அடிபட்டதால் அவரால் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளிலும் மற்றும் ஐபிஎல் தொடக்கத்தில் சில போட்டிகளில் அவரால் விளையாட முடியாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
இதனால் இந்தியா ரசிகர்கள் ஒரு பெரிய சந்தோஷம் என்றே சொல்லலாம். ஏனென்றால் கடந்த டி-20 போட்டிகளில் ஆர்ச்சரின் பந்தை சமாளிக்க முடியமால் திணறினர். அதுமட்டுமின்றி பல விக்கெட்டை எடுத்துள்ளார். அதனால் அவர் இல்லாதது இங்கிலாந்து அணிக்கு நிச்சியமாக வருத்தமாகத்தான் இருக்கும்.