நடராஜனுக்கு அடித்த லக் …!! இங்கிலாந்து எதிரான போட்டியில் வாய்ப்பு இருக்குமா ???

0

இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அந்த இரண்டு சீரியஸ் போட்டிகளிலும் இந்தியா கிரிக்கெட்அசத்தலான வெற்றியை கைப்பற்றியுள்ளது.

அதுமட்டுமின்றி இன்று மதியம் 1;30மணி அளவில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி புனேவில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளதால், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த கொண்டு இருக்கின்றனர். இன்றைய முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அணியில் யார் யார் விளையாட போகிறார்கள் என்று பல எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

ஓப்பனிங் ஆர்டர் :

தவான் மற்றும் ரோஹித் சர்மா ஏனென்றால் இவர்கள் ஒருநாள் போட்டிகளில் மிகவும் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல ரன்கள் குவிந்துள்ளனர்.

மிடில் ஆர்டர் ;

கே.எல். ராகுல் , விராட் கோலி , ஹார்டிக் பாண்டிய , ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய பேட்ஸ்மேன்கள் விளையாட அதிகம் வாய்ப்புள்ளது.

பௌலிங் :

புவனேஸ்வர் குமார், குர்னல் பாண்டிய , தாகூர் மற்றும் நடராஜன் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்

நடராஜனுக்கு அடித்த லக் …!! இங்கிலாந்து எதிரான போட்டியில் வாய்ப்பு இருக்குமா ???

கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மட்டுமின்றி பல போட்டிகளில் திறமையாக விளையாடிய நடராஜனுக்கு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வாய்ப்புகள் இருக்குமா? என்று பல கேள்வி எழுந்துள்ளன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பும்ரா அவரது கல்யாண வேலையில் இருப்பதால் அவரால் இந்த தொடரில் விளையாட முடியாமல் போய்விட்டது. அதனால் அவர் இடத்தில் நடராஜனுக்கு வாய்ப்பு தருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தமிழ் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here