இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். உள்ளூர் போட்டிகளில் ஐபிஎல் போட்டிதான் பிரபலமான ஒன்று.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் போட்டி மக்களின் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் 13ஆண்டுகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் மிகவும் முக்கியமான அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழையாமல் வெளியேறியது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
தொடர் தோல்விக்கு காரணம் தோனி மற்றும் கெதர் ஜாதவ் தான் என்று ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை கூறியுள்ளனர். இருந்தாலும் சரியான நேரத்தில் கெதர் ஜாதவ் பேட்டிங் சரியாக செய்யவில்லை என்பது தான் ஒரு காரணம்.
கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் பல தோல்விகளுக்கு கெதர் ஜாதாவும் தான் காரணம் என்று அவரை சமூகவலைத்தளங்களில் கேலி கிண்டல் செய்து வந்தனர். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு அவரை ஏலத்தில் வெளியேவிட்டனர்.
அதனால் சிஎஸ்கே அணியில் இருந்து தூக்கிய சிஎஸ்கே நிர்வாகம் , அவர் 2 கோடி கொடுத்து சன்ரைசர்ஸ் ஐராபாத் அணி எடுத்துள்ளது. அதனால் அவரை அணியில் வைத்திருப்பரா ?? டேவிட் வார்னர் என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.
சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஐராபாத் அணியின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு விடியோவை பகிர்ந்துள்ளார். அதில் பேட்டி கொடுத்த கெதர் ஜாதவ் நாங்கள் எங்களுது முதல் பயிற்சியை செய்து முடித்துள்ளோம், அணியின் உள்ள வீரர்கள் அனைவரும் சிறப்பான முறையில் பயிற்சி செய்து வருகின்றனர் என்று கூறியுள்ளார் கெதர் ஜாதவ்.