இந்தியாவின் கேப்டன் விராட் கோலி கடந்த போட்டிகளில் ஒரு ரன்கள் கூட அடிக்க முடியாமல் அவுட் ஆகிவிட்டார். அதனால் சமூகவலைத்தளங்களில் விராட் கோலியை வைத்து கிண்டல் செய்து வருகின்றனர். அதனால் கோலி ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
முதல் டி-20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங்கை தேர்வு செய்தனர். முதலில் பேட்டிங் செய்த தவான் மற்றும் சில வீரர்கள் எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தனர். அதனால் இந்தியா அணியால் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
அதனால் இந்தியா கிரிக்கெட் அணி வெறும் 124 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். இதனை சுலபமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்கள் வெறும் 13 ஒவரில் வெற்றியை கைப்பற்றினார். அதனால் இந்தியா கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர்.
ஆனால் இரண்டாவது போட்டியில் விராட் கோலி தொடக்கத்தில் பொறுமையாக விளையாடினாலும் போக போக அதிரடியாக விளையாடிய விராட் கோலி இந்தியா அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். சமீபத்தில் முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மன் அளித்த பேட்டியில் கோலியை பற்றி கூறியுள்ளார்.
விராட் கோலியின் ஆட்டம் மிகவும் எனக்கு பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி முதல் மூன்று போட்டிகளில் ஒரு ரன்கள் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அனால் அதனை சரிக்கட்டும் வகையில் இரண்டாவது டி-20 போட்டியில் அதிரடியான ஆட்டத்தை விளையாடி 17.5 ஓவரில் இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றுள்ளார்.
முதலில் சில போட்டிகளில் டக் அவுட் ஆனதால் , விராட் கோலி மீண்டு வருவாரா? என்ற கேள்வி எழுந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது ஆட்டத்தை 2வது போட்டியில் அதிரடியாக ஆகியுள்ளார்.