வீடியோ ; ஆடுகளத்தில் ஏற்பட்ட குழப்பம் , கே.எல்.ராகுல் விக்கெட்டை பறிபோகும் படி செய்தார் ரிஷாப் பண்ட், நல்ல வேலை ஜஸ்ட் மிஸ் ..!

0

இன்று மதியம் போலந்தில் தெம்பா பவுமா தலைமையிலான சவுத் ஆப்பிரிக்கா அணியும் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் சிறப்பான ஆட்டம் அமைந்தது. ஆனால் முதல் விக்கெட்டான ஷிகர் தவான் இழந்த பிறகு இந்திய அணிக்கு நேரம் சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆமாம்.. ! ஷிகர் தவானை தொடர்ந்து விராட்கோலியின் விக்கெட் உடனடியாக பறிபோனது.

அதுவும் எந்த ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தார் முன்னாள் இந்திய கேப்டனான விராட்கோலி. பின்னர் ரிஷாப் பண்ட் ஆடிய அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியின் ரன்கள் உயர காரணமாக இருந்துள்ளார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்த நிலையில் 287 ரன்களை அடித்துள்ளது இந்திய.

288 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியுள்ளது தென்னாபிரிக்கா அணி. 14 ஓவர் முடிவில் 90 ரன்களை அடித்துள்ளது சவுத் ஆப்பிரிக்கா. வெற்றியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும் ….!

இதற்கிடையில், தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது ஷிகர் தவான் மற்றும் விராட்கோலி ஆகிய இருவரும் தொடர்ந்து ஆட்டம் இழந்தனர். பின்னர் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரும் இணைந்து இந்திய அணியை சிறப்பாக கொண்டு சென்றனர்.

சரியாக 15வது ஓவரில் இருவரும் பேட்டிங் செய்து கொண்டு இருந்தனர். அந்த ஓவரில் மர்க்கரம் வீசிய பந்தை எதிர்கொண்டார் ரிஷாப் பண்ட். அப்பொழுது அந்த பந்தை அடித்த ரிஷாப் பண்ட், ரன்களை ஓட முன்வந்தார், அதனை பார்த்த கே.எல்.ராகுலும் ரன்களை அடிக்க ஓடினார். ஆனால் திடிரென்று ரிஷாப் பண்ட் பாதியில் வந்த பிறகு மீண்டும் பேட்டிங் செய்த இடத்திற்கு சென்றுவிட்டார்.

அதனை கவனிக்காமல் கே.எல்.ராகுல் எதிர் பக்கம் சென்றார். அது ரன் அவுட் தான் என்று கே.எல்.ராகுல் நினைத்தார், ஆனால் அந்த வாய்ப்பை சவுத் ஆப்பிரிக்கா வீரர்கள் தவரவிட்டனர். அந்த வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது. சின்ன ஒரு தவறால் கே.எல்.ராகுல் விக்கெட் தவற இருந்தது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here