வேற ஆளே இல்லையா ? உங்களுக்கு ? இவரை எதற்கு கேப்டனாக நியமனம் செய்தீர்கள் ?? முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து ; சரியாக தான் சொல்கிறார் போல ..!

இந்திய அணிக்கு தென்னாபிரிக்கா அணிக்கு சுற்று பயணம் மேற்கொள்ள கொண்டதில் ஒரு பயனும் இல்லை . ஆமாம்… டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தொடரை கைப்பற்றவில்லை.

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றது. அதனால் நிச்சியமாக மூன்று டெஸ்ட் போட்டிக்கான தொடரில் எப்படியாவது இந்திய அணி வென்று விடும் என்று நினைத்தால் அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் தென்னாபிரிக்கா அணி வென்று தொடரை கைப்பற்றியது.

சரி… எப்படியாவது ஒருநாள் போட்டியில் வெல்ல வேண்டும் என்று இந்திய அணி பலமான பயிற்சியில் ஈடுபட்டது. ஆனால் தோல்வி தான் மிஞ்சியது. ஆமாம்… ரோஹித் ஷர்மாவுக்கு தசை பிடிப்பு ஏற்பட்ட காரணத்தால் அவரால் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாட முடியவில்லை.

அதனால் அவருக்கு பதிலாக ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்தினார். ஆனால் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் அதற்கு நேர் எதிர்மாறாக தான் நடந்துள்ளது. இதனை பற்றி பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரரான சல்மான் பட் அளித்த பேட்டியில் ;

கே.எல்.ராகுல் இன்னும் கேப்டன் பதவிக்கு தயாராகவில்லை. ஆனால் இது சரியான நேரம் தான். அவர் (கே.எல்.ராகுல்) சிறந்த வீரர் தான், ஆனால் கேப்டன் பதவியை அவருக்கு கொடுத்தால் அவருடைய சுமை அதிகரித்து கொண்டே தான் போகும். அதுமட்டுமின்றி முன்னாள் கேப்டனான விராட்கோலியும் அணியில் இருப்பதால் கே.எல்.ராகுலால் அணியை வழிநடத்துவது கடினமாக தான் இருக்கும்.

அதற்கு அவர் மேல் நான் எந்த தவறும் சொல்லவில்லை, இந்திய அணி இதுவரை சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களை மட்டுமே உருவாக்கி வருகின்றனர். இந்த இரு போட்டிகளை வைத்து இந்திய அணியை குறைத்து மதிப்பிட முடியாது, விராட்கோலி மற்றும் தோனி ஆகிய இருவரும் இந்திய அணியை வெளிநாடுகளுக்கு சென்று அபாரமான வெற்றியை பெற்றுள்ளன.

அதனால் இந்த இரு போட்டியின் தோல்வியை பெரிய தோல்வியாக கருத வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார் சல்மான் பட். முதல் ஒருநாள் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது தென்னாபிரிக்கா அணி.