இனிமேல் தான் இவருடைய ஆட்டம் அதிரடியாக இருக்க போகிறது ; இவரை அடுச்சிக்க ஆளே இல்லை ; முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் பங்கர் பேட்டி ;

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிலும் சமீபத்தில் தான் டெஸ்ட் போட்டிக்கான தொடர் நடந்து முடிந்துள்ளது. அதில் 2 – 1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலையில் இருந்ததால் தொடரை கைப்பற்றியது.

அதனை தொடர்ந்து இப்பொழுது இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டன் பதவி பற்றிய சர்ச்சை மட்டும் தொடர்ந்து கொண்டே வருகிறது. ஆமாம்… கடந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை 2021 போட்டிக்கு பிறகு ஆரம்பித்தது இந்த பிரச்சனை.

ஐசிசி உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு நான் டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக அவரே அறிவித்தார். ஆனால் அதன்பிறகு ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து எந்த கேள்வியும் கேட்டாகமல் வெளியேற்றியுள்ளனர். அதனால் விராட்கோலி மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது.

அதன்பிறகு, டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக மட்டும் இருந்தார் விராட்கோலி, ஆனால் அதுவும் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. ஆமாம்… சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியை பெற்ற பிறகு நான் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று விராட்கோலியே அறிவித்தார்.

அதனால் விராட்கோலி ஒரு வீரராக ப்ளேயர் ஆக பல சாதனைகளை செய்ய போகிறார் என்று முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் பங்கர் அளித்த பேட்டியில் ; இந்திய அணியின் கேப்டனாக இவ்வளவு ஆண்டுகள் இருப்பது மிகவும் கடினம்.

விராட்கோலி ஒரே இடத்தில் நின்று கொண்டு இருக்கமாட்டார், மைதானத்தில் களமிறங்கினால் போதும் அவ்வவ்போது அங்கு அங்கு மாறிக்கொண்டே அணியை சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார். ஒரு போட்டிக்கு முன்பு அல்லது போட்டிக்கு பிறகு அவர் இந்திய வீரர்கள் இடையே சிறப்பாக பேசி வந்துள்ளார்.

இன்று முதல் போட்டியில் இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகு தலைமை தாங்கி நடத்தி வந்துள்ளார். அதில் விராட்கோலி இருப்பதால் கே.எல்.ராகுல் சில கடினமாக விஷயங்களை சுலபமாக கடந்து வந்துவிடுவார்.

விராட்கோலி ஒரு மிகச்சிறந்த தலைவன். கடந்த ஆறு ஆண்டுகளாக அவரது கடமையை சிறப்பாக செய்துள்ளார். ஆனால் இப்பொழுது விராட்கோலி 3.0 பார்க்க போகிறோம். ஆமாம் …! விராட்கோலியின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் ஒரு ஆபத்தான வீரர் என்பதை காட்ட போகிறார் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் பங்கர் .