இவங்க இருக்கும் வரை இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியாது ; கோபத்தில் இருக்கும் ரசிகர்கள் ;

0

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் கடந்த வாரம் முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் நியூஸிலாந்து அணி முதல் இடத்திலும், பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும், தென்னாபிரிக்கா அணி மூன்றாவது இடத்திலும், இந்திய கிரிக்கெட் அணி நான்காவது இடத்திலும் உள்ளனர்.

பல ஆண்டுகளாக போராடி வரும் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியமா ? சந்தேகம் தான் :

முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடியது இந்திய கிரிக்கெட் அணி. அதில் விராட்கோலி மற்றும் கே.எல்.ராகுலின் பார்ட்னெர்ஷிப் மட்டும் சரியாக அமையாமல் இருந்திருந்தால் நிச்சியமாக தோல்வி தான் கிடைத்திருக்கும். ஏனென்றால் தொடக்க வீரர்களின் மோசமான விளையாட்டு தான் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி கொடுத்தது.

சுப்மன் கில்-க்கு டெங்கு காய்ச்சல் என்ற காரணத்தால் அவருக்கு பதிலாக இளம் வீரரான இஷான் கிஷான் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் தொடக்க வீரராக களமிறங்கினார்கள். ஆனால் இஷான் கிஷான் முதல் பதிலே ஆட்டம் இழந்த காரணத்தால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

அதனை அடுத்து ரோஹித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அடுத்தது விக்கெட்டை இழந்தனர். ஒரு ரன்களை கூட அடிக்காத இந்திய அணி 3 விக்கெட்டை பறிகொடுத்தனர். இருப்பினும் விராட்கோலி மற்றும் கே.எல்.ராகுலின் சிறந்த பங்களிப்பு தான் இந்திய கிரிக்கெட் அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்துள்ளது.

இன்றைய போட்டியில் இவர்கள் இருவரும் இருக்க கூடாது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்:

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரின் தொடக்க ஆட்டம் இந்திய அணிக்கு தேவையே இல்லை. ரோஹித் சர்மா இதற்கு ஓய்வை அறிவிக்கலாம் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, விராட்கோலியின் நம்பிக்கையான ஆட்டத்திற்கு ரசிகர்கள் இடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது.

மீண்டும் இஷான் கிஷான் தொடக்க வீரராக விளையாட வேண்டுமா ? அவருக்கு பதிலாக யார் தொடக்க வீரராக விளையாடினால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here