நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கியது கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி மற்றும் தெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்கா அணி.
அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. ஆனால் டி-காக் மட்டும் அனைத்து பேட்ஸ்மேன்களுடனும் பார்ட்னெர்ஷிப் செய்து 124 ரன்களை அடித்துள்ளார்.
அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழந்து 287 ரன்களை அடித்துள்ளது தென்னாபிரிக்கா அணி. பின்னர் 288 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கிய இந்திய. எவ்வளவு தடவை பட்டாலும் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்து மோசமான தோல்வியை தான் இந்திய அணி சந்தித்து வருகிறது. ஆமாம் …!
அதுவும் இந்திய அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் 9 ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில் எதிர் அணிக்கு சாதகமாக மாறியது. பின்னர் தவான் மற்றும் விராட்கோலி ஆகிய இருவரும் குறிப்பிட்ட நேரம் சிறப்பாக பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை குவித்தனர். அவர்களும் ஆட்டம் இழக்க பின்னர் பவுலரான தீபக் சஹார் முடிந்த வரை ரன்களை அடித்தார். ஆனால் இறுதி ஓவர் வரை போராடி இந்திய அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது.
அதில் கே.எல்.ராகுல் 9, தவான் 61, விராட்கோலி 65, பண்ட் 0, ஷ்ரேயாஸ் ஐயர் 26, சூர்யகுமார் யாதவ் 39, தீபக் சஹார் 54 ரன்களை அடித்துள்ளனர். அதனால் இறுதி வரை கஷ்டப்பட்டு 283 ரன்களை அடித்த இந்திய அணி, வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் 3 – 0 என்ற அடிக்கப்படையில் தென்னாபிரிக்கா அணி சாதனை படைத்து தொடரை கைப்பற்றியுள்ளது.
போட்டி முடிந்த பிறகு கே.எல்.ராகுல் அளித்த பேட்டியில் ; தீபக் சாஹர் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றி பெற வாய்ப்புகள் அமைத்து கொடுத்தார். கடந்த இரு போட்டிகளை விட இந்த போட்டியில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்துள்ளது. நாங்கள் சிறப்பாக தான் விளையாடினோம். ஆனால் நீண்ட நேரம் எங்களால் எதிர் அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்த முடியவில்லை.
அதற்கு நான் எங்கள் வீரர்களை குறை சொல்ல முடியாது. இது போன்ற விஷயங்கள் நடப்பது சாதாரணம் தான், ஆனால் அதில் என்ன கற்றுக்கொண்டோம் என்பது தான் மிகவும் முக்கியமான ஒன்று. அதுமட்டுமின்றி உலகக்கோப்பை போட்டிக்கு இன்னும் பல நாட்கள் உள்ளது, அதனால் இந்த தவறுகளை நாங்கள் கூடிய விரைவில் சரி செய்து கொள்வோம் என்று கூறியுள்ளார் கே.எல்.ராகுல்.