இந்திய அணி செய்த இந்த தவறை, தென்னாபிரிக்கா அணி செய்யவே இல்லை ; அதனால் தான் தொடரை கைப்பற்றியுள்ளது ; இதை யாருமே கவனிக்கவில்லை …!

0

ஒருவழியாக தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணி இடையேயான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதுவும் டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்து சில நாட்கள் ஆகும் நிலையில், 2 – 1 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றியது.

பின்னர் நடைபெற்று மூன்று ஒருநாள் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட இந்தியை வெல்ல விடாமல் 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது தென்னாபிரிக்கா அணி. அதனால் ஒரு தொடரை கூட கைப்பற்ற முடியமால் இந்திய கிரிக்கெட் அணி மோசமான தோல்வியை பெற்று நாடு திரும்ப உள்ளனர்.

நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணிக்கு தொடக்கத்தில் சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. அதில் அதிகபட்சமாக டி-காக் 124, டூஸ்ஸன் 52 ரன்களை அடித்துள்ளனர்,

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்து 287 ரன்களை அடித்துள்ளனர். அதில் டி-காக் 124, மலன் 1, பவுமா 8, மர்க்கரம் 15, டூஸ்ஸன் 52, மில்லர் 39, மகாராஜ் 6 ரன்களை அடித்துள்ளனர். பின்னர் 288 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.

ஆனால் தோல்வி தான் மிஞ்சியது. ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக இந்திய அணியை .கே.எல்.ராகுல் சிறப்பாக வழிநடத்துவார் என்று நினைத்தால் மிகவும் மோசமான நிலைக்கு இந்திய கிரிக்கெட் அணி தள்ளப்பட்டுள்ளது தான் உண்மை.

ஆமாம்.. மொத்தம் மூன்று ஒருநாள் போட்டியிலும் இந்திய அணிக்கு தோல்வி தான். டெஸ்ட் போட்டியில் ஆவது ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றியை, ஆனால் அதுவும் இல்லாமல் ஒருநாள் போட்டியில் மோசமான நிலையில் இருந்துள்ளது இந்திய.

அதற்கு என்ன காரணமாக இருக்கும் ?? தென்னாபிரிக்கா அணிக்கு தொடர்ந்து மூன்று ஒரு போட்டியிலும் ஒருவர் மாற்றி ஒருவர் ரன்களை அடித்து கொண்டே வந்தனர். முதல் ஒரு நாள் போட்டியில் தெம்பா பவுமா 110, டூஸ்ஸன் 129, இரண்டாவது ஒருநாள் போட்டியில் மலன் 91, டி-காக் 78 ரன்களை அடித்துள்ளனர்.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் டி-காக் 124, டூஸ்ஸன் 52 ரன்களை அடித்துள்ளனர். ஆனால் இந்திய அணியில் இப்படி யாருமே செய்யவில்லை என்பது தான் உண்மை. கே.எல்.ராகுல் வெறும் ஒரு போட்டியில் தான் அரைசதம் அடித்துள்ளார். ஷிகர் தவான், விராட்கோலி மட்டும் தான் மூன்று போட்டியிலும் சொல்லும் அளவிற்கு ரன்களை அடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று முதல் ஒரு போட்டியிலேயே தெரியும். ஆனால் கேப்டனான கே.எல்.ராகுல் சரியான ஆட்களை வைத்து விளையாடவில்லை என்பது தான் உண்மை. தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியின் தோல்விக்கு என்ன காரணம் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் COMMENTS பண்ணுங்க..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here