கே.எல்.ராகுல் -க்கு பதிலாக இளம் வீரரான இவர் கேப்டனாக இருந்திருக்கலாம் ; கடுப்பான ரசிகர்கள் என்ன பேட்டிங் செய்கிறார் ?

0

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான போட்டி உண்மையிலும் இந்திய அணிக்கு நேரம் சரியில்லை. ஆமாம்.. ஏதாவது ஓரு தொடரில் ஆவது இந்திய அணி வெற்றி பெற்றிருக்கலாம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்தது. அதில் தென்னாபிரிக்கா அணி 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த காரணத்தால் டெஸ்ட் போட்டிக்கான தொடரை கைப்பற்றியது. அதேபோல தான் ஒருநாள் போட்டிக்கான போட்டியிலும் மொத்தம் மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றியை கைப்பற்றியது தென்னாபிரிக்கா அணி.

அதனால் இந்திய அணி தொடரை கைப்பற்ற முடியமால் தோல்வியை சந்தித்து நாடு திரும்ப உள்ளனர். இன்று தான் மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது. அதில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஆறுதல் வெற்றியாக இருக்கும். என்ன செய்ய போகிறது இந்திய அணி என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை ரோஹித் சர்மா தான் தலைமை தாங்கி நடத்த வேண்டும். ஆனால் அவருக்கு கையில் அடிபட்ட காரணத்தால் அவரால் இந்த தொடரில் பங்கேற்க முடியமால் போய்விட்டது. அதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தினார். ஆனால் அதில் ஒரு பயனும் இல்லை….!

ஆமாம்…! அணியை சரியாக தேர்வு செய்ய முடியவில்லை.. சரியாக ரன்களை அடிக்கவில்லை அதன்பிறகு இவரை எதற்கு கேப்டனாக நியமனம் செய்தீர்கள் ? என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையான கோபத்தில் அவரவர் கருத்துகளை பதிவு செய்து கொண்டு வருகிறார்கள். அதுவும் சரிதான்.

இதுவரை பல முறை ஐபிஎல் டி20 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்துள்ளார் கே.எல்.ராகுல் ஆனால் ஒருமுறை கூட கோப்பையை வென்றதே இல்லை. அதுமட்டுமின்றி கே.எல்.ராகுல் சமீப காலமாக ஒருநாள் போட்டியில் சொல்லும் அளவிற்கு ரன்களைய அடிபதில்லை. அப்படி இருந்தும் எதற்கு கே.எல்.ராகுலை கேப்டனாக நியமனம் செய்தது பிசிசிஐ.

கே.எல்.ராகுல் சிறந்த வீரராக இருக்கலாம் ஆனால் கேப்டனாக இருக்க இவருக்கு சரியாக தகுதி இன்னும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆமாம்…கே.எல்.ராகுல் 12,55, 9 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் -க்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் நிச்சியமாக நல்ல ஒரு மாற்றம் மட்டுமின்றி இந்திய அணி ஏதாவது போட்டியில் வெற்றியை கைப்பற்றிருக்கலாம்.

ஏனென்றால் சமீப காலமாக ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் பற்றியும் அவர் அடித்த சதங்கள் பற்றியும் ரசிகர்கள் பேசிக்கொண்டே இருக்கின்றனர். ஆமாம்… சமீபத்தில் நடந்த முடிந்துள்ள விஜய் ஹசாரே கோப்பையில் தொடர்ந்து மூன்று சதம் அடித்து சாதனை படைத்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்.

கே.எல்.ராகுல் நல்ல பேட்ஸ்மேனாக இருக்கலாம் ஆனால் கேப்டனாக இருக்க இது சரியான தருணம் இல்லை என்பது தான் உண்மை. கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலகிய பிறகு இந்திய அணிக்கு கேப்டன் பற்றிய பிரச்சனை எழுந்து கொண்டே தான் செல்கிறது. இந்த முக்கியமான நேரத்தில் தான் ரோஹித் ஷர்மாவுக்கு அடிப்பட்டுள்ளது. ஒருவேளை ரோஹித் சர்மா அணியில் இடம்பெற்ற பிறகு எப்படி வழிநடத்த போகிறார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here