விளையாடாத இவர் துணை கேப்டன் ஆ ? இவரால் ஒரு பிரச்சனையும் கிடையாது ; கே.எல்.ராகுல் ஓபன் டாக் ;

பங்களாதேஷ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் 2 – 1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி தொடரை கைப்பற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி, நாளை முதல் முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கிறது.

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, ஒருநாள் போட்டிக்கான தொடரில் விளையாடி கொண்டு இருந்த நிலையில் ரோஹித் சர்மா, தீபக் சஹார் போன்ற வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கு பதிலாக புஜாரா, நவதீப் சைனி போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதுமட்டுமன்றி, கேப்டனான ரோஹித் சர்மாவிற்கு இரண்டாவது ஒருநாள் போட்டியில் கையில் பலமாக அடிபட்ட காரணத்தால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் கூட விளையாட முடியாத சூழல் உருவானது. அதனால் அவருக்கு பதிலாக டெஸ்ட் போட்டியின் கேப்டனாக கே.எல்.ராகுலை அறிவித்துள்ளது பிசிசிஐ. அதுமட்டுமின்றி, அணியில் ரிஷாப் பண்ட் விளையாடி கொண்டு வரும் நிலையில் ஏன் ? புஜாராவிற்கு துணை கேப்டன் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்று பல கேள்விகள்..!

அதற்கு பதிலளித்த கே.எல்.ராகுல் கூறுகையில் : “இங்க பாருங்க.. துணை கேப்டனாக இருக்க என்ன தகுதி இருக்க வேண்டுமென்று தெரியாது. அணியில் இடம்பெறும் வீரர்களை ஆதரித்து கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் உண்மை. எனக்கும் நான் துணை கேப்டனாக பதவி பெற்றால், அது எனக்கு சந்தோசமாக தான் இருக்கும். அப்பொழுது சில பொறுப்புகள் வரும்.”

“அதனால் பெரிய மாற்றம் அணியில் நடக்க போவதில்லை. ஏனென்றால் அனைவருக்கும் அணியில் என்ன செய்ய வேண்டுமென்று நன்கு தெரியும். நிச்சியமாக ரிஷாப் பண்ட் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் இந்திய கிரிக்கெட் அணிக்காக சிறப்பாக விளையாடி உள்ளனர். அதனால் அவர்களை மட்டுமே அணி நம்பி விளையாடவில்லை. அவரும் பொறுப்புடன் விளையாடுவார்.” என்று கூறியுள்ளார் கே.எல்.ராகுல்.”

புஜாராவை தேர்வு செய்தது ஏன் ? ரசிகர்கள் ஆவேசம் ; ஏனென்றால் வெறும் டெஸ்ட் போட்டிக்கான தொடரில் மட்டுமே விளையாடி கொண்டு இருக்கும் புஜாராவின் பங்களிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே தான் வருகிறது. அதுமட்டுமின்றி, புஜாரா இறுதியாக விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் 15, 21, 7, 0, 17, 8, 15, 4, 12*, 9 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இப்படி மோசமான நிலையில் விளையாடி கொண்டு இருக்கும் புஜாராவை ஏன் துணை கேப்டனாக அறிவித்துள்ளது இந்திய ?