கூடிய விரைவில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் கே.எல்.ராகுல் நீக்கம் ; அதற்கு காரணம் இதுதான் ;

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடரை கடந்த 9ஆம் தேதி அன்று தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டியில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தொடர் இன்று காலை 9:30 மணியளவில் தொடங்க இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியில் ஏதாவது மாற்றம் நடக்குமா என்று கேட்டல் சந்தேகம் தான். இருந்தாலும் மிடில் ஆர்டரில் மாற்றம் நடைபெற வாய்ப்புகள் இருக்கிறது..!

சரியாக விளையாடாத வீரருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகின்றனர் :

இந்திய வீரரான கே.எல்.ராகுல் கடந்த சில மாதங்களாவே எதிர்பார்க்கும் அளவிற்கு இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுவதே இல்லை. ஐபிஎல் போட்டிகளில் கூட அவ்வப்போது சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி வரும் கே.எல்.ராகுல் இந்திய கிரிக்கெட் அணியில் மட்டும் விளையாடுவது இல்லை.

அதேபோல தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வெறும் 20 ரன்களை அடித்த நிலையில் ஆட்டத்தை இழந்தார். அதுமட்டுமின்றி, இந்திய அணியின் முன்னாள் வீரரான வெங்கடேஷ் பிரஷாத் சமீபத்தில் அளித்த பேட்டியில் ;

“எனக்கு தெரிந்து கே.எல்.ராகுலை தேர்வு செய்வது அவரது திறமையை பொறுத்து இல்லை அவருக்கு என்று சில பாரபட்சம் அணியில் பார்க்கப்படுகிறது.” என்று கூறியுள்ளார் வெங்கடேஷ் பிரஷாத்.

சமீபத்தில் இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர் தேர்வாளர்களுக்கான பதவிக்காக வெங்கடேஷ் பிரசாத் பெயர் முன்னிலையில் இருக்கிறது. ஒருவேளை சேத்தன் சர்மா மற்றும் நீக்கப்பட்டால், வெங்கடேஷ் பிரசாத் தான் தலைமை தேர்வாளராக இருக்க முடியும். அப்படி இருக்கும் நிலையில் கே.எல்.ராகுலுக்கான வாய்ப்பு மறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப காலமாகவே இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரரான சுப்மன் கில்-க்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் முதல் டெஸ்ட் போட்டி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கே.எல்.ராகுல் விளையாடிய நிலையில் வெறும் 20 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.