என்ன டா..! சாமி இவரு இப்படி பவுலிங் பண்றாரு ; ஆஸ்திரேலியா அணியை திணறடித்து இந்திய பவுலர்கள் ;

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டியில் 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் இருக்கிறது.

Source: Twitter

அதனை தொடர்ந்து இன்று காலை 9:30 மணியளவில் தொடங்கியுள்ளது இரண்டாவது டெஸ்ட் போட்டி. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி மீண்டும் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி : முதல் இன்னிங்ஸ் :

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் 15 ரன்களில் ஆட்டம் இழந்தார். இருப்பினும் உஸ்மான் கவாஜா 81 ரன்களை விளாசியுள்ளார். ஒரு சில வீரர்களை ரன்களை தொடர்ச்சியாக அடித்த நிலையில் 78.4 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நிலையில் 263 ரன்களை அடித்துள்ளனர்.

அதில் டேவிட் வார்னர் 15, உஸ்மான் கவாஜா 81, பீட்டர் ஹன்ட்ஸ்கோம் 72 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். ஆஸ்திரேலியா அணி பேட்டிங் முடிந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்ய தயாராக இருக்கின்றனர்.

அட்டகாசமாக பவுலிங் செய்த இந்திய வீரர்கள் :

டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் மோசமான நிலையில் வெளியேறியதற்கு முக்கியமான காரணம் பவுலிங் தான். ஆனால் சமீப போட்டிகளில் இந்திய அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாக மாறியுள்ளது.

அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான நிலையில் ரன்களை அடிக்க முடியாமல் தவித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, அதற்கு முக்கியமான காரணம் இந்திய அணியின் பவுலிங் தான்.

அதேபோல, தான் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக பவுலிங் செய்த ஷமி 14.4 ஓவர் பவுலிங் செய்து 60 ரன்களை விட்டுக்கொடுத்த 4 விக்கெட்டையும், ரவீந்திர ஜடேஜா 21 ஓவர் பபவுலிங் செய்து 57 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டையும், அஸ்வின் 3 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

இந்தியாவில் போட்டிகள் நடைபெற்று வருவதால் ஸ்பின்னர்ஸ் பவுலிங் சிறப்பாக செயல்படுகிறது தான் உண்மை. முதல் டெஸ்ட் போட்டியிலும் ஜடேஜா 5 விக்கெட்டையும், அஸ்வின் 3விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டியை போலவே இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெறுமா ? இல்லையா ?