கடந்த 28 ஆம் தேதியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணி மோதின. அதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பௌலிங் தேர்வு செய்தது. முதலில் பட்டிங் செய்த பெங்களூர் அணியின் வீரர்கள் நல்ல ஒரு தொடக்க ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
படிக்கல் 54 ரன்களையும், பின்ச் 52 ரன்களையும் ,விராத் கோலி வெறும் 3 ரன்களையும் ,எடுத்து ஆட்டம் இழந்தனர். ஆனால் டி வில்லிர்ஸ் ஆட்டம் இழக்காமல் 55 ரன்களையும் சிவம் துபே 10 பந்தில் 7ரன்களையும் அடித்து அணியின் ஸ்கோர் 201 என்ற கணக்கில் போட்டியை முடித்தனர்.
அதன்பின்னர் 202 எடுத்தால் வெற்றி என்று இறங்கிய மும்பை அணி. முதலில் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தியது. ஏனென்றால் மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா வெறும் 8 ரன்களையும் , டி காக் வெறும் 14 ரன்களையும் , சூர்யாகுமார் யாதவ் 0 ரன்களை எடுத்து அவுட் ஆனார்கள். மும்பை கண்டிப்பாக தோல்வியை சந்திக்கும் என்று ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் அதன்பின்னர் இறங்கிய மும்பை வீரர் இஷான் கிஷான் 99 ரன்களையும் கீரோன் பொல்லார்ட் 60 ரன்களையும் எடுத்து வெற்றிக்கு கொண்டு சென்றனர். ஆனால் இறுதி நேரத்தில் இஷான் கிஷான் அவுட் ஆனதால் மும்பை அணிக்கு மீடும் தடுமாற்றம் ஏற்பட்டது.
அதன்பின்னர் இறுதி ஓவரில் 19 எடுத்தால் வெற்றி என்று இருந்த மும்பை அணி 18 ரன்களை எடுத்து ஆட்டத்தை டிரா செய்தது. அதன்பின்னர் சூப்பர் ஓவரில் முதலில் களம் இறங்கிய மும்பை அணி வெறும் 8 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதிலும் 99 அடித்த இஷான் கிஷான் இறங்கவில்லை. பொல்லார்ட் மற்றும் ஹார்டி பாண்டிய இருவரும் விளையாடினர்.
சூப்பர் ஓவரில் 9 ரன் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கிய பெங்களூர் அணி வீரர்கள் விராத் கோலி மற்றும் வில்லிர்ஸ் நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிபெற செய்தனர். அதுமட்டுமின்றிஇவர்கள் இருவருக்கு இடையே நல்ல ஒரு நட்பு உள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.