சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இருவர் மாற்றம் !! சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி .

0

கடந்த 19 ஆம் தேதி ஐபிஎல் 2020 முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணி மோதினர். அதில் பல தடைகளை தண்டி வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி. அந்த ஆட்டத்தில் ராயுடு நல்ல ஒரு ஆட்டத்தை வெளிபடுத்தினார். ரெய்னா இல்லை என்றாலும் அந்த இடைத்தை அம்பதி ராயுடு சரியாக பயன்படுத்தினார்.

ஆனால் அவர் 100% உறுதியாக இல்லை என்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் தோனி இரண்டாவது ஆட்டத்தில் அவருக்கு பதிலாக ருடுராஜ் என்று வீரரை இடமாற்றம் செய்தார் ஆனால் அந்த செயல் சென்னை அணிக்கு தோல்வியை கொடுத்தது.

சென்னை அணிக்கு இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது அதில் இறுதிவரை போராடிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது. ஒருவேளை அம்பதி ராயுடு இருந்தால் கண்டிப்பாக ராஜஸ்தான் அணியை வென்று இருக்க முடியும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

முன்றாவது போட்டியில் டெல்லி அணியை எதிர் கொண்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மீண்டும் தோல்வியை சந்தித்தது. தொடர் தோல்வி காரணமாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்கள் ரெய்னா மீண்டும் வர வேண்டும் என்று சமூக வலைதளங்களில் அவரவர் கருத்துகளை கூறிவருகின்றன.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு நான்காவது போட்டியில் எதிர்கொள்ள இருக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் போட்டியில் கண்டிப்பாக பிராவோ மற்றும் அம்பதி ராயுடு இருக்கலாம் என்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் பயிற்சியாளர் பிளெம்மிங் கூறியுள்ளார்.

அம்பதி ராயுடு இருந்தால் கண்டிப்பாக நல்ல ஒரு தொடக்க ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெளிபடுத்தும் என்பதில் மாற்றுகருத்து இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here