இந்தியா அணி வெற்றிக்கு இந்த இருவர் தான் முக்கியா காரணம்….! கோலி ..

இங்கிலாந்துக்கு எதிரான முதல் நாள் போட்டி புனேவில் உள்ள மைதானத்தில் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பௌலிங் தேர்வு செய்துள்ளது. அதனால் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வீரர் ரோஹித் சர்மா 28 ரன்கள், தவான் 98 ரன்களிலும் ஆட்டம் இழந்துள்ளனர்.

அதன்பின்னர் களம் இறங்கியா இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி 60 பந்தில் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். இந்தியா அவ்ளோதான் என்று நினைத்த போது கே.எல்.ராகுல் மற்றும் , குர்னால் பாண்டிய ஆகிய இருவரும் ஆட்டம் இழக்காமல் 50 ஓவர் முடியும் வரை பேட்டிங் செய்தனர்.

அதிலும் கே.எல்.ராகுல் 62 ரன்கள் மற்றும் குர்னால் பாண்டிய 58 ரன்களையும் எடுத்துள்ளனர். 50 ஓவர் முடிவில் 317 ரன்கள் எடுத்துள்ளார் இந்திய அணியின் வீரர்கள். 318 எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களம் இறங்கியா இங்கிலாந்து அணியின் வீரர்கள் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினர்.

இருந்தாலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜேசன் ராய் 46 ரன்கள் மற்றும் பரிஸ்டோவ் 94 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணியின் அடுத்து இறங்கிய வீரர்கள் அனைவரும் சரியான ஆட்டத்தை விளையாட முடிவில்லை.

இதனால் 42.1 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழந்த இங்கிலாந்து அணி 251 ரன்களை மட்டுமே எடுத்துள்ளனர். அதனால் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதனால் மூன்று ஒருநாள் போட்டியில் ஒரு பொடியை வென்ற இந்தியா அணி இன்னும் ஒரு போட்டியில் வென்றால் போதும்.

இந்தியா அணி வெற்றிக்கு இந்த இருவர் தான் முக்கியா காரணம்….! கோலி ..

இறுதியாக நடந்த ஒரு நாள் உலகக்கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி. அதனால் இங்கிலாந்து அணி மிகவும் கடினம் என்று பலர் கூறிவந்தனர். இருந்தாலும் நேற்று நடந்த முதல் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர் இந்தியா கிரிக்கெட் அணி.

போட்டி முடிந்த பிறகு விராட் கோலி அளித்த பேட்டியில் ; இந்தியா அணியில் புதிதாக அறிமுகம் ஆன குர்னால் பாண்டிய மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகிய இருவரும் முதல் சர்வதேச போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன. குர்னால் பாண்டிய ஆட்டம் இழக்கமால் 31 பந்தில் 58 ரன்களை எடுத்துள்ளார் ( 7 பௌண்டரி மற்றும் 2 சிக்சர் ) அடித்துள்ளார்.

பௌலிங்கில் குர்னால் பாண்டிய 10 ஓவர் பந்து வீசிய வெறும் 59 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார் குர்னால் பாண்டிய. அதே சமையத்தில் பிரஷித் கிருஷ்ணா 8.1 ஓவர் பந்து வீசி வெறும் 54 ரன்கள் கொடுத்த நிலையில் 4 விக்கெட்டையும் எடுத்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றிக்கு இவர்களில் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அவர்கள் முதல் சர்வதேச போட்டியில் அசத்தலான விளையாட்டை விளையாடியுள்ளார் என்று இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி .