ஐயோ…! இவரா…! டி-20 உலககோப்பைக்கான போட்டியில் இலங்கை அணியில் களமிறங்க போகிறார்…! முழு விவரம் இதோ…!

வருகின்ற ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளது. அதில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் கென் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோத உள்ளன. அதனால் இறுதி போட்டியில் யார் வெற்றியை பெற்று கோப்பையை கைப்பற்றுவார் என்று எதிர்ப்பார்க்க படுகிறது.

அது ஒரு பக்கம் இருக்க …. வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெற போகிறது டி-20 உலகக்கோப்பை போட்டி. ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது, இந்த ஆண்டு ஐசிசி, டி-20 உலகக்கோப்பை போட்டியை நடத்த இந்தியாவிடம் பொறுப்பு கொடுத்தது. ஆனால் இந்த சமயத்தில் இந்தியாவில் …….. தோற்று அதிகம் இருப்பதால், என்ன செய்வது என்று தெரியாமல் பல குழப்பத்தில் உள்ளது பிசிசிஐ.

ஏனென்றால் பல எதிர்ப்புகளை தாண்டி இந்தியாவில் ஐபிஎல் 2021 ஆரம்பித்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சில வீரர்களுக்கு ….. தோற்று இருப்பது உறுதியானது. அதனால் வேறு வழியில்லாமல் ஐபிஎல் 2021 போட்டியை பாதியில் நிறுத்தியது பிசிசிஐ. அதனால் , இப்பொழுது வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்திய வர பயந்துள்ளார். என்ன செய்யப்போகிறது பிசிசிஐ என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான லசித் மலிங்கா மீண்டும் இலங்கை அணியில் இணைந்து டி-20 உலகக்கோப்பை போட்டியில் விளையாட போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை போட்டியிலும் லசித் மலிங்கா இருப்பர் என்று எதிர்பார்க்கிறோம்.

சமீபத்தில் இலங்கையின் முன்னாள் பவுலர் Wickramasinghe அளித்த பேட்டியில் ; டி-20 உலகக்கோப்பை மற்றும் 2023 ஆம் உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் லசித் மலிங்கா இருப்பார் என்று நாங்கள் நினைத்து கொண்டு இருக்கிறோம். நாம் எப்பையுமே அதனை மறந்துவிட முடியாது. இதற்கு பதிலளித்த மலிங்கா ; நான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இருந்து ஓய்வு பெற்றுள்ளேன். ஆனால் டி-20 போட்டியில் இன்னும் விலகவில்லை.

அதனால் இலங்கை அணியை தேர்வு செய்ய போகும் வீரர்கள், என்னை போன்ற வீரர்கள் எப்படி இடம்பெருவார்கள் என்று தெரியவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் நிச்சியமாக அசத்தலான ஆட்டத்தை விளையாடுவேன் என்று கூறியுள்ளார் மலிங்கா…!