Last Warning கொடுத்த தோனி..! அடுத்த போட்டியில் நிச்சியமாக அணியில் மாற்றம் இருக்கும்..! யார் அது?

இதுக்கு மேலயும் இவர் சரியாக விளையாடவில்லை என்றால் நிச்சியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருப்பது கடினமாக தான் இருக்கும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்பதே உண்மை…..!!!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த பட ஐபிஎல் 2021, சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். ஐபிஎல் போட்டியில் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் ஒரே போட்டி அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் போட்டிதான்.

இதுவரை 30 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டியிலும், மும்பை இந்தியன்ஸ் அணி 18 போட்டியிலும் வெற்றியை கைப்பற்றியுள்ளது. இதுவரை அதிகமாக மும்பை அணிதான் சிஎஸ்கே அணியை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்படி இந்திய மற்றும் பாகிஸ்தான் போட்டியில் மக்களுக்கு ஆர்வம் இருக்குமோ… அதேபோல தான் இங்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போட்டி என்றால் அதில் பல திருப்பு முனைகள் இருக்கும் என்று ரசிகர்கள் இன்னும் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

தோனி கொடுத்த Last Warning இவருக்கு தான். இதுவரை இவர் சரியான பந்து வீசவில்லை, அதனால் நிச்சியமாக அடுத்த போட்டியில் வேறொரு இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. கடந்த ஆண்டு போல இந்த ஆண்டு பவுலிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார் தாகூர்.

ஆனால் ஐபிஎல் 2021னில், இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய தாகூர் 211 ரன்களை கொடுத்துள்ளார். அதில் வெறும் 4 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் சராசரியாக ஒரு ஓவருக்கு சுமார் 9 ரன்களை கொடுத்து வருகிறார்.

இப்படியே சென்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆபத்தாக கூட இருக்கலாம் என்று நினைத்து, அவருக்கு இறுதி வாய்ப்பு கொடுக்கலாம் என்று தோனி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற போட்டியிலும் அவர் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் நிச்சியமாக அவருக்கு பதிலாக புதிய வீரரான ஹரி ஷங்கர் ரெட்டி போன்ற வீரர்கள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை ஒருவர் சிறப்பாக ஒருமுறை விளையாடினால் போதும், அவரை அணியில் இருந்து வெளியேற்றுவது என்பது சிஎஸ்கே அணிக்கு கடினமான ஒன்று. ஆனால் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு அவர் அதனை பயன்படுத்தவில்லை என்றால் சிஎஸ்கே அணி அவரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும். தாகூர் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.