பங்களாதேஷ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த மூன்று ஒருநாள் போட்டிக்கான 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணியை வென்று பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தொடரை கைப்பற்றியுள்ளனர்.


அதனை அடுத்து இரு தினங்களுக்கு முன்பு தொடங்கியுள்ளது டெஸ்ட் போட்டிக்கான தொடர். முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை. இந்திய அணியின் நிலைமை மோசமான நிலையில் தான் இருந்தது.
ஆனால் புஜாரா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான விளையாட்டால் இந்திய கிரிக்கெட் அணிக்கு ரன்கள் குவிந்தன. அதனால் 133.5 ஓவர் வரை விளையாடிய இந்திய அணி 10 விக்கெட்டை இழந்த நிலையில் 404 ரன்களை அடித்தனர். அதில் ராகுல் 22, சுப்மன் கில் 20, புஜாரா 90, விராட்கோலி 1, ரிஷாப் [பண்ட் 46, ஸ்ரேயாஸ் ஐயர் 86, அக்சர் பட்டேல் 14, ரவிச்சந்திரன் அஸ்வின் 58, குல்தீப் யாதவ் 40, உமேஷ் யாதவ் 15* ரன்களை அடித்துள்ளனர்.


அதனை அடித்து 405 ரன்களை அடிக்க வேண்டிய சூழலில் களமிறங்கியது பங்களாதேஷ் அணி. ஆனால் இந்திய அணியை காட்டிலும் மோசமான நிலையில் விளையாடி வரும் பங்களாதேஷ் அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வருகின்றனர். மொத்தம் 44 ஓவர் விளையாடிய பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டை இழந்த நிலையில் 133 ரன்களை அடித்துள்ளனர்.
அதில் சாகிர் ஹசன் 20, யாசிர் அலி 4, லிட்டன் தாஸ் 24, ரஹீம் 28, நூருல் ஹசன் 16, மெஹிடி ஹசன் 16 ரன்களை அடித்துள்ளனர்.
லிட்டன் தாஸ் மற்றும் முகமத் சிராஜ் ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட மோதல் :
பங்களாதேஷ் அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக திகழும் லிட்டன் தாஸ், முதல் இன்னிங்ஸ் விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் சரியாக 13.1 ஓவரில் இந்திய பவுலரான முகமத் சிராஜ்-யிடம் மோதல் ஏற்பட்டது. அப்பொழுது, லிட்டன் தாஸ் காதின் மேல் கைவைத்து கிண்டல் செய்தார். ஆனால் அடுத்த பந்தில் சிராஜ் வீசிய பந்து ஸ்டும்ப்ல அடித்த காரணத்தால் லிட்டன் தாஸ் விக்கெட்டை இழந்தார். அதனை கொண்டாடும் விதமாக லிட்டன் தாஸ் எப்படி காதின் மேல் கைவைத்தாரோ, அதே போல சிராஜ் மற்றும் விராட்கோலி செய்த வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.
A fiery battle between Mohammed Siraj and Litton Das. 🍿
📹: Sony Sportspic.twitter.com/1u564VBfUk
— The Field (@thefield_in) December 15, 2022